58
ஓ ! ஓ ! தமிழர்களே !
உன்னுடைய மதம் தேவையில்லை; உன்னுடைய ஒழுக்கம் தேவை இல்லை; உன்னுடைய பாரதப் பண்பாடு தேவையில்லை என்று நாங்கள் சொல்வதிலே என்ன தவறு? என்ன ஒருமைப்பாடு? என்ன ஒற்றுமை? மக்களை இழி மக்களாகக் கருதுகிற உன்னுடைய இழிவான தன்மைகளைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம்.
நாங்கள் பிரிவினையாளர்கள் இல்லை; நீதான் பிரிவினைக்காரன்:
நாங்கள் பிரிவினையாளர்கள் அல்லர். இந்தத் தமிழ்நாடு பிரிய வேண்டும் என்று சொன்னால் அது உங்களால் தான். நாங்கள் நாட்டைப்பிரிக்கவேண்டும் என்று சொல்லுகிறோம். அதில் ஒன்றும் தவறு இல்லையே. நீ மாந்தனையே பிரித்தாளுகிறாயே! மக்களையே பிரிக்கிறாயே. இவன் தாழ்ந்தவன், இவன் பிற்பட்டவன், இவன் தொடப்படாதவன், தீண்டப்படாதவன், இழிந்தவன் என்று ஆயிரம் சாதிகளை வைத்துக் கொண்டு உன்னை மட்டும் பிராமணன் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறாய்-பார்ப்பனன் என்று சொல்கிறதில்லை.
அன்பர் ஒருவர் கேட்டார்-பார்ப்பணன் என்றால் என்ன, பிராமணன் என்றால் என்ன, ஆரியன் என்றால் என்ன என்று எல்லாம் வேறு வேறு, ஆரியர்கள் என்றால் எப்படி? தமிழர்கள் என்றால் எப்படி என்று வரலாறு சொல்கிறது.
தமிழினத்திற்கு ஏதாவது செய்யத்தானே நாம் பதவிக்குப் போக வேண்டும்.
"தென்மொழி" கடந்த முப்பத்தோர் ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதே போல தமிழ்ச்சிட்டு இருபத்தைந்து ஆண்டுகளாக நடக்கிறது. யார் அதைப் படித்