பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

59

தார்கள்? எங்கோ மாணவர்கள் ஒரு சிலர் படித்துவிட்டு ஆசிரியர்கள் ஆனார்கள்; அறிஞர்கள் ஆனார்கள், ஆட்சியிலே அமர்ந்தார்கள். இன்றைக்கு இருக்கிற அமைச்சர்களில் பெரும்பாலானோர் தென்மொழி படித்தவர்கள். மாணவர் நிலையிலே நமக்குத் துணையாக இருந்தவர்கள். இல்லையென்று சொல்லவில்லை, இதை எதற்குச் சொல்லுகிறேன்? ஒரு பதவியைப் பெற்ற பின்னாலே - ஓர் ஆளுமையைப் பெற்ற பின்னாலே - ஓர் அதிகாரத்தைப் பெற்ற பின்னாலே. கொஞ்சம் பொருள் வரவு பெற்ற பின்னாலே உணர்வுகள் எல்லாம் அவர்களிடத்தில் மங்கி விடுகின்றன: மழுங்கி விடுகின்றன. அவர்கள் இழந்து விடுகின்றனர்.மீண்டும் அடிமையாகப் போய்விடுகின்றனர். அவர்கள் அடிமையாகப் போகிற பொழுது அடிமையாவது அவர் மட்டுமல்லர்: அவருடைய குடும்பம் மட்டுமன்று: இங்கிருக்கிற ஏழரைக் கோடி மக்களும்! இந்த உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கிற பதினேழரைக் கோடி தமிழர்களையும் அடிமைகளாக ஆக்குகிறார்கள். இவர்களைக் காட்டிக் கொடுத்து அவர்கள் பல நலன்களைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்பதை அவர்கள் நினைவிலே வைத்துக் கொள்ள வேண்டும். ஏன் என்று கேட்டால் இவர்களுக்கு நலன்கள் செய்வதற்குத்தான் அவர்கள் அங்கு போகிறார்களாம். ஆம் நம்முடைய நலத்துக்காக நம்முடைய உரிமைக்காகத்தான் - என்று கூறித்தான் பதவிக்குப் போகிறார்கள். ஆனால் அங்கு போனபின் என்ன நடக்கிறது? மேலோட்டமாகச் சில சீர்திருத்தங்கள். மேலோட்டமாகச் சில செயற்பாடுகள். அது, தமிழுக்காக யார் வந்தாலும் அதே செயல்கள்தாம், ஆட்சிக்காக அவர்கள் அங்கு போக, வேண்டியதில்லை