பக்கம்:ஓ மனிதா.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கீரி கேட்கிறது

101

முட்டாளா?’ என்று உங்கள் புத்திசாலித்தனத்தை நீங்களே மெச்சிக்கொண்டு திரும்பி விடுகிறீர்கள்!

இத்தகைய சந்தேகப் பிராணிகளான நீங்கள், ‘அற்புதப் பிரார்த்தனை! அதைச் செவி மடுத்ததும் பார்வையில்லாதவனுக்குப் பார்வை திரும்புகிறது; முடவன் கையிலுள்ள கோலை வீசி எறிந்துவிட்டு எழுந்து ஓடுகிறான்’’ என்று யாராவது சொன்னவுடன என்ன செயகிறீர்கள்?—உங்கள் வீட்டிலுள்ள குருடனையும் முடவனையும் இழுத்துக் கொண்டு சாரி சாரியாகச் செல்கிறீர்கள், அந்தப் பிரார்த்தனையைச் செவிமடுக்க!


ங்கள் ஊருக்குள்ளே ஒரு மடம் இருக்கிறது. மடத்துக்குள்ளே ஜடாமுடியுடனும், ஜடாமுடி இல்லாமலும் எத்தனையோ சாமியார்கள் இருக்கிறார்கள். அவர்கள் உங்களை உய்விக்கவும், அதே சமயத்தில் தங்களையும் உய்வித்துக் கொள்ளவும் என்னவெல்லாமோ செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் உங்களுக்கு நம்பிக்கை வரமாட்டேன் என்கிறது. அது மட்டுமல்ல, உங்களில் சிலர் அவர்களை எள்ளி நகையாடவும் செய்கிறீர்கள்.

ஊருக்கு வெளியே திடீரென்று இரண்டு சாமியார்கள் தோன்றுகிறார்கள். இருவரும் இரு மலைக் குகைகளைத் தேடிப் பிடித்துத் தங்குகிறார்கள்.

அவர்களுடைய தலை முடியும் தாடி மீசையும் வளருகின்றன, வளருகின்றன, வளர்ந்துகொண்டே இருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/102&oldid=1371079" இலிருந்து மீள்விக்கப்பட்டது