பக்கம்:ஓ மனிதா.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கீரி கேட்கிறது

105

தெல்லாம் உங்களைப் போன்ற மனிதர்களைப் பொறுத்த விஷயம். கடவுளைப் பொறுத்த விஷயத்தில் உங்கள் நம்பிக்கை எப்படி இருக்கிறது?

விண் எந்த விஞ்ஞானியாலும் படைக்கப்பட்டதல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள்; மண் எந்த விஞ்ஞானியாலும் படைக்கப்பட்டதல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள்; நீர் எந்த விஞ்ஞானியாலும் படைக்கப்பட்டதல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள்; நெருப்பு எந்த விஞ்ஞானியாலும் படைக்கப்பட்டதல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள்; காற்று எந்த விஞ்ஞானியாலும் படைக்கப்பட்டதல்ல என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

ஆனால் அவற்றைப் படைத்த விஞ்ஞானி ஒருவன் இருக்க வேண்டும். அவனே ‘கடவுள்’ என்பதை நம்புபவர்கள் உங்களில் எத்தனை பேர்?

அந்தக் கடவுளை மையமாக வைத்து, ஒரு பாவமும் அறியாத அவரை உங்களுக்காகப் பத்து அவதாரங்கள் எடுக்கச் செய்து, அறுபத்துநாலு திருவிளையாடல்கள் புரிய வைத்து, அவற்றின மூலம் பல அற்புதங்களைப் புராணங்களிலும், இதிகாசங்களிலும் நடத்திக் காட்டி, அவற்றை வைத்து ‘கடவுள் இருக்கிறாரா, இல்லையா?’ என்று ஆத்திகனையும், நாத்திகனையும் மோத விட்டு உங்களைக் குழப்ப விட்டிருக்கிறார்களே, அவற்றை நம்புபவர்கள் உங்களில் எத்தனை பேர்?

நிச்சயமாக முன்னவர்களைக் காட்டிலும் பின்னவர்கள்தான் அதிகமாயிருக்க வேண்டும், இல்லையா?

ஒ.-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/106&oldid=1371100" இலிருந்து மீள்விக்கப்பட்டது