பக்கம்:ஓ மனிதா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

ஓ, மனிதா!

'உண்மையோ, பொய்யோ வள்ளுவரைப் பற்றி ஒரு கதை உண்டு. கதை கடந்த காலம் கணவன் தலையில் மனைவி சட்டியைப் போட்டு உடைக்க, அந்தச் சட்டியின் அடிப்புறம் உடைந்து வாய்ப்புற வட்டம் மட்டும் உடையாமல் அவன் கழுத்தில் ஆரம்போல மாட்டிக் கொள்ள, அதைப் பார்த்த அவ்வை,

“வீணாக உடைந்த சட்டி
வேணதுண்டு என் தலையில்
பூணாரம் பூண்ட

புதுமைதனைக் கண்டதில்லை”

என்று அந்தக் கணவன் பாடிய ஒரு பாட்டும் பாடி வைத்து விட்டுப் போயிருக்கிறாளே, அந்தக காலமாயிருக்கவேண்டும். அந்தக் காலத்தில் இந்தப் பூலோகத்தில் இருந்த ஆண்களெல்லாம் இல்லறத்தை விடத் துறவறமே நல்லது என்று எண்ணி சந்நியாசம் வாங்கிக் கொண்டு விட்டார்களாம் இதை அறிந்த பிரம்மா ‘இதென்ன வம்பு என் தொழிலே கசிந்து விடும் போலிருக்கிறதே!’ என்று கவலைப் பட்டாராம். ‘கவலைப்படாதீர், நான் கவனித்துக் கொள்கிறேன் அவர்களே!’ என்று மன்மதன் பூலோகத்துக்கு வந்து, அத்தனை சந்நியாசிகளின் மேலும் கணைமேல் கணையாக விட்டுப் பார்த்தானம்; ஒன்றும் நடக்க வில்லையாம். கடைசியாக பிரம்மா சிவபெருமானை நெருங்கி; ‘எல்லாம் உங்களால் வந்த வினை! நீங்கள் ஒரு சமயம் பார்வதியை விட்டு விட்டுச் சாம்பரை எடுத்து உடம்பெல்லாம் பூசிக் கொண்டு கையில் ஓடேந்தி நடக்க, அதைப் பார்த்த பூலோகத்து ஆண்களெல்லாம் அப்படியே நடக்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது என் தொழில் நடப்பது எப்படி? என்று கடாவ, ‘அஞ்சற்க’ என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/27&oldid=1370292" இலிருந்து மீள்விக்கப்பட்டது