பக்கம்:ஓ மனிதா.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

ஓ, மனிதா!

இது ‘நீதிக் கதைகள் வரிசை’யில் சொல்லப்பட்டிருப்பதால் இதிலுள்ள நீதியையும் கவனிக்க வேண்டாமா?—அது இது:

‘பகைவனுக்கு அருள்வாய்! என்று பகவான் கண்ணன் சொன்னால் என்ன, ‘இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல்’ என்று. வள்ளுவன் சொன்னால் என்ன? உன்னாலேயே செய்ய முடிந்த உதவியைக்கூட நீ உன் பகைவனுக்குச் செய்யாதே! செய்து, பகையை நாளுக்கு நாள் வளர்க்காமல் இருந்துவிடாதே!’

இப்படி ஒரு கதை. இன்னொன்று:

‘கொக்காரே, கொக்காரே! நாளைக்கு நீங்கள் என் வீட்டுக்கு வரவேண்டும்; வந்து ஒரு கப் பால் பாயசம் சாப்பிட்டுவிட்டுப் போக வேண்டும்’ என்று மிக்க வினயத்துடன் கேட்டுக் கொண்டதாம் நரி. ‘அதற்கென்ன, பேஷாய் வருகிறேன்!’ என்று சொல்லிவிட்டு மறுநாள் சொன்னது சொன்னபடி கொக்கு பால் பாயசம் சாப்பிட்டுவிட்டு வர நரியின் வீட்டுக்குச் சென்றதாம். அங்கே நரி என்ன செய்ததாம், தெரியுமா? இரண்டு தட்டுகளில் பால் பாயசத்தை ஊற்றிக் கீழே வைத்துவிட்டு, ‘ம், சாப்பிடுங்கள்!’ என்று கொக்கை உபசரித்ததாம். மூக்கால் பாயசத்தை உறிஞ்சிக் குடிக்க முடியாமல் கொக்கு விழிக்க, நரி தன் நாக்கால் ஒரே நிமிடத்தில் தட்டைக் காலி செய்து விட்டு, ‘எப்படி, எங்கள் வீட்டுப் பாயசம்?’ என்று கேட்டதாம். தனக்கு நேர்ந்த அவமானத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் ‘பிரமாதம்!’ என்ற கொக்கு என்ன செய்ததாம், தெரியுமா? ‘எங்கள் வீட்டு அரிசி அப்பளத்தை நீங்கள் இன்னும் சாப்பிடவில்லையே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/37&oldid=1370745" இருந்து மீள்விக்கப்பட்டது