பக்கம்:ஓ மனிதா.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

ஓ, மனிதா!


சொல்வதைச் சும்மாவாவது சொல்கிறீர்களா என்றால் அதுவும் இல்லை!

‘ஜனகண மன அதி நாயக ஜயஹே
பாரத பாக்கிய விதாதா
பஞ்சாப சிந்துகுஜ ராத மராட்டா

திராவிட உத்கல வங்கா......’

என்று அடி பிறழாமல், தாளம் தவறாமல் பாடிவிட்டுச் சொல்கிறீர்கள். அந்தப் பாட்டின் பொருள் உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்?—தெரிந்துதான் இருக்கும்.

‘இந்தியாவின் சுகதுக்கங்களை நிர்ணயிக்கிற நீதான மக்கள் எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செலுத்துகிறாய்...’

‘நின் திருநாமம் பஞ்சாபையும் சிந்துவையும், குஜராத்தையும் மகாராஷ்டிரத்தையும், திராவிடத்தையும் வங்காளத்தையும் உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது!...’

‘அது விந்திய, இமாசல மலைகளில் எதிரொலிக்கிறது; யமுனை, கங்கை கதிகளின் இன்ப நாதத்தில் கலக்கிறது. இந்தியக்கடல் அலைகளால் ஜபிக்கப்படுகிறது!’

‘அவை நின் ஆசியை வேண்டுகின்றன, நின் புகழைப் பாடுகின்றன!...’

‘இந்தியாவின் சுகதுக்கங்களை நிர்ணயிக்கிற உனக்கு வெற்றி, வெற்றி, வெற்றி!’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/61&oldid=1370831" இருந்து மீள்விக்கப்பட்டது