பக்கம்:ஔவையார் கதை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

ஔவையார் கதை


விட்டாலோ அங்கே அனுப்பப்பெற்ற தூதுவர் உடனே திருப்பி அழைக்கப்பட்டுவிடுவர். ஆகவே, பகை தோன்றாத வரை அது தோன்றாதிருக்குமாறு பார்த்துக்கொள்வதே இக்கால அரசியல் தூதர் ஆற்றும் பணி. உள்ள பகையைப் போக்க உழைப்பது அவர்கள் தொழிலன்று. ஆனால், பண்டைக்காலத்தில் தூதுவர் பகையரசர் அவைக்கு அனுப்பப்படுதலே மிகுதியாகும். உள்ள பகையை ஒழிக்க முயல்வதே அக்காலத் தூதுவர் ஆற்றவேண்டிய அரும் பணியாய் இருந்தது. ஆகவே, இக்காலத் தூதுவர் செய்யும் வேலையைக்காட்டிலும் அக்காலத் தூதுவர் செய்த வேலையே செய்தற்கரியது. அச்செயலை ஒரு பெண் செய்தாள் என்றால் எவ்வளவு வியத்தற்குரியது பார்த்தீர்களா! தொண்டைமானிடம் தாதுசெல்ல இசைந்த ஒளவையார் காஞ்சிமாநகரம் நோக்கிப் புறப்பட்டார்.

பாட்டு

காஞ்சி மாநகர் ஆண்ட மன்னன்
கர்வமிகக் கொண்ட தொண்டை மானாம்
ஆய்ந்த படைபலம் ஆர்ந்த என்றன்
ஆற்றல் அறியாமல் சீற்ற முற்றான்
என்றன் திறமை பெருமை யெல்லாம்
இன்றே தொண்டைமான் அறிய வேண்டும்
நன்றுநீர் தூதுசென்றேத வேண்டும்
நாயவன் செருக்கை யடக்க வேண்டும்
இவ்விதம் அதியமான் வேண்டி நின்றான்
இன்றமிழ் ஒளவை அதற்கிசைந்தார்
கவ்வைகொள் காஞ்சி நகர் அடைந்தார்
காவலன் தொண்டைமான் எதிர் கொண்டான்
மன்னன் விருந்தாய் மகிழ்ந்து இருந்தார்
வந்த செயற்கெதிர் பார்த்து இருந்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/20&oldid=507910" இலிருந்து மீள்விக்கப்பட்டது