பக்கம்:ஔவையார் கதை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஔவையார் கதை

21


அன்னவன் ஒளவையை உடன் அழைத்தான்
ஆயுதச் சாலையைக் காணு மென்றான்
படைக்கலக் கொட்டிலைப் பார்த்து நின்றார்
பார்த்திபன் தொண்டைமான் பக்கம் வந்தான்
உடைப்பரும் தண்டம் ஒளிர் வேல்வாள்
ஒளியுடன் நெய்யணிக் திலங்கக் கண்டார்
மன்னன் செருக்கு மடியும் வண்ணம்
வன்மையாய்ப் பேசும் வாய்ப்பை யுற்றார்
மன்னா! பொன்னேளிர் வேலும் வாளும்
மயிற்பீலி அணிந்தொளி வீசு மையோ !
குந்தம் ஈட்டிவேல் தண்ட மெல்லாம்
கொள்ளுறை உள்ளே குலவு மையோ!
கொந்தணி மாலைகள் கொண்ட வையோ !
கொற்றவ! நன்றுநன்று இவைகள் எல்லாம்
பகுத்துண் வள்ளல் அதிய மானின்
படைக்கலம் எதுவும் மனையில் இல்லை
தொகுத்த அவன்படைக் கலங்கள் எல்லாம்
தொடுத்தபோர் தன்னால் சிதைந்த ஐயோ!
குத்திப் பகைவர்ச் சிதைத்த எல்லாம்
கொல்லன் உலைக்களம் கிடக்குமையா
எத்திக் கும்புகழ் இனிய வள்ளல்
ஏந்தல் அதியமான் வீரம் என்னே!

வசனம்

இவ்விதம் சாதுரியமாகப் பேசித் தொண்டைமானைப் புகழ்வதுபோல இகழ்ந்தார். இவ்விதம் இகழ்வதுபோல் புகழ்வதும், புகழ்வதுபோல் இகழ்வதுமாகிய செயலை வஞ்சப்புகழ்ச்சி என்று வழங்குவார்கள். நிந்தாஸ்துதி என்றும் சொல்லுவார்கள். வசைக்கவி பாடுவதில் வல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/21&oldid=507911" இலிருந்து மீள்விக்கப்பட்டது