பக்கம்:ஔவையார் கதை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளவையார் கதை

23


காரியினை நேரில் கண்டார்
கடும்போரை நிறுத்துக என்றார்
அதியமான் வாளின் வன்மை
அவனது வேலின் திண்மை
குதிரைகள் யானைச் சேனை
கொண்டதிறம் கூறி நின்றார்
ஒளவையின் அமுதச் சொல்லை
மலேயமான் அறிந்தா னில்லை
கவ்வைகொள் போரை அன்றே
கடுமையாய்த் தொடங்கி விட்டான்
அதியமான் படைக்கு முன்னே
அஞ்சியே நெஞ்சு குலைந்தான்
பதியினை யிழந்து சிதைந்து
பற்றற்றே யோடி மறைந்தான்
மலையமான் திருமுடிக் காரி
மன்னவனின் கோவ லூரும்
அதியமான் வசமாயிற்றே
அயலவர் பகையா யிற்றே
அதியமான் அடைந்த வெற்றியை
ஒளவையார் புகழ்ந்து பாடினார்
குதிகொள்ளும் படைகள் கொண்ட
கொற்றவனைப் பாடல் எளிதோ !
வாளினைத் தாங்கும் தோளாய் !
வள்ளலே உங்தன் வீரம்
கேளாரின் உள்ளம் நடுங்கும்
கேட்டார்தம் உடல் பூரிக்கும்
போர்வென்றி புகழ்ந்து பாடிய
புலவரைப் போற்றி மகிழ்ந்தான்
போர்தனில் ஊரை யிழந்த
புரவலன் காரி சினந்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/23&oldid=507913" இலிருந்து மீள்விக்கப்பட்டது