பக்கம்:கங்கா.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கங்கr "முதலில் இரக்கம் கண்டுதான் அன்பாய் மாறும்." "நீங்கள் சொல்வது கருணை. நான் குறிப்பது அது வல்ல. அன்பு, அன்பு, அன்புகூட இல்லை. உள்ளத்தின் நேர் எழுச்சி. இரு தன்மைகள் திடீரென ஒன்றுடன் ஒன்று இழைந்தோ, மோதியோ விளையும் ரஸ்ாயனம். அது வேண்டுகிறேன்-இப்படி வாருங்கள் உட்கார்ந்து பேசு வோம். மழையோ விட்டபாடில்லையே " "இந்த அன்புக்கு நாங்கள் எவ்வளவு ஏங்குகிறோம். உங்களுக்குத் தெரியுமா? உங்களால் அறியவே முடியாது. உங்களைவிட அங்கம் சிதைந்த நாங்கள் நன்கு அறிவோம்." "இம் மெய்யெனும் பொய்’ என்று மெய்கண்டார் உடலைப் பழிப்பது ஏனோ எனக்குத் தெரியவில்லை. இம் மெய்யினும் மெய் எது? நான் யார் என்று என்னை நான் எண்ணிப் பார்த்தால் இவ்வுடலைத்தான் நான்’ என்பேன். அழியும் உடல்தானே என்பீர்கள். அழியட்டுமே” அதனால் அதன் நான் குறைந்துவிடுமா ? நீங்கள் சிகரெட் குடிக்கும் பழக்கமுண்டா ? இல்லையா ? நான் 65t; 3&sum or? Thank you.” புகையை ஆசையாய் இரண்டு இழுப்பு இழுத்தான். "இந்தக் கை, இது என் பிற்வியூனம்.” "என்னைப் பெற்றவள், இதைப் பார்த்த பயத்தில் சுவர்ப் பக்கம் திரும்பினவள் திரும்பினவளைத் திருப்பி யதும் உயிர் போயிருந்ததாம். "கடவுளை ஒன்று கேட்க நியாயம் உண்டு. ஏன் கஷ்டத்தைக் கொடுத்தாய் என்று நான் கேட்கவில்லை. ஆனால் கூடவே ஏன் ரோசத்தைக் கொடுத்தான் ? நான் ஏதோ ஒன்றும் இல்லாததைப் பிரமாதம் பண்ணுகிறேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/102&oldid=764274" இலிருந்து மீள்விக்கப்பட்டது