பக்கம்:கங்கா.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

89

. என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உங்கள் கை நல்ல கை நினைவில் வையுங்கள். ஆகையால் எப்பவும் நீ நானாக மாட்டாய். நானும் நீயாக மாட்டேன். நம்மின் "நான் நான் தனித்தனி.” அவன் சட்டென ஒருமையில் நழுவியது மரியாதைக் குறைவாய், பண்புக் குறைவாய் இல்லை. பாந்தமாகவே பட்டது. "என்னுள் எனக்கு ஒரே கேள்விதான். என்னைச் சமமாய்ப் பாவிப்பவர் யார் ? நான் படிக்கும் நாளிலும் என்னுடன் ஒரு பையனும் சண்டைக்கோ, சச்சரவுக்கோ வரமாட்டான். வாத்தியாரே தடுத்து விடுவார். "பாவம், அவனோடு என்னடா சண்டை?” "பாவம் பாவம் ! பாவம் !" பாவத்தின் ஸ்மரிப்பு எப்பவும் என்னைச் சூழ்ந்தது. வாழ்நாள் முழுவதும் உலகம் என்னிடம் காட் டும் நடைமுறையே இதுதான். என் கையைக் காட்டிலும், இதுதான் என் குறை. இதையா வேண்டினேன்? ஆயினும் நான் வேண்டுவதை அடைவது எப்படி ? மனத்தை திருப்புதல் எப்படி ? எதனின்று மனத்தைத் திருப்ப முயற்சியுடன் அதனின்று திருப்புகிறோமோ, அத்தனைக்கத்தனை அதிலேயேதான் மனம் திரும்பத் திரும்பத் திரும்புகிறது. சில சமயங்களில் வாழ்க்கையின் இன்பப் பகுதிகளைப் பலவந்தமாகவே வாழ்க்கையினின்று பிடுங்கி அனுப வித்தல் நலம் என்று தோன்றுகிறது. முதலில் அக்ரம மாகத் தோன்றினாலும் இறுதியில், பயன்பட்டவன் பயன் படுத்துவோன், இருவருக்குமே அதுதான் நன்மையாய் முடியும் கொள்கை. ஆனால் அந்த ஆரம்ப முரட்டுத்தனத் திற்கு அஞ்சுவதில்தான் நாம் அவஸ்தைப்படுகிறோம். அந்த முரட்டுத்தனம்கூட அவ்வளவு அக்ரமம் அன்று. அதை விலக்க நமக்குப் பக்கபலமாய் நாம் கொண்டாடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/103&oldid=1283315" இலிருந்து மீள்விக்கப்பட்டது