பக்கம்:கங்கா.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

கங்கா


தன்மானம், சுய கெளரவம், தன்மதிப்பு, பிறர் மனம் கருதுதல் முதலிய லட்சியங்களெல்லாம் இறுதி எடையில் பலவீனங்களாய்ப் போய்விடுகின்றன. "உதாரணமாய்ப் பாருங்களேன், முன்னோர்கள் தயவில் எனக்குப் பணம் காசுக்குக் குறைவில்லை. ஒரு மனைவியை நான் விலைக்கு வாங்கிவிடலாம். இருந்தும் என் கை அந்தத் துணிச்சலுக்குக் குறுக்கே நின்று தடுத்தது. வந்தவள் என் எதிரிலோ, கண் மறைவிலோ என் கையைப் பற்றி வாய்விட்டுப் பேசாவிட்டாலும் மனத் தில்கூடவா அஞ்சாமல் இருப்பாள் ? பச்சையாய் வாய் விட்டுச் சொல்கிறேன். ஊனமற்ற ஆர்வத்துடன் என் நல்ல கையால் அவளை நான் இறுகப் புல்லுகையில் என் தோள்மேல் பதிந்த அவள் முகம் என் கண்ணுக்குத் தெரியாமல் என் முதுகுவழி என் கைச் சூம்பலைக் காணாது இருக்குமோ ? அப்போது அவள் அருவருப்பின் விதிர்விதிர்ப்பு அவளை ஊடுருவுகையில் அது எவ்வளவு ஸ்ன்னமாய் இருப்பினும் அதை நான் உணராமல் இருப் பேனோ ? அதன் கொடும் நிழலைக் குறுக்கே வைத்துக் கொண்டு நாங்கள் வாழ்க்கை நடத்துவது எப்படி என்று நினைக்கையிலேயே என் உள்ளம் பதறிற்று. ஆயினும் உலகில் இதைவிட அநியாயங்கள் நடக்கவில்லையா? சில சமயங்களில் நியாயமாகவே சேரவேண்டிய உரிமைக்குக் கூட சுய கெளரவம் இடம் கொடுக்க மாட்டேனென் கிறது.” இன்னொரு சிகரெட்டை அவன் பற்ற வைத்தான். "சுர்'ரென்று தீக்குச்சி பற்றிச் சுடர் அவன் முகத்தை எற்றி உடனே அவிந்தது. விக்ரஹத்தின் உக்ரஹ விழிகள். பிறகு இருளிலிருந்து அவன் குரல் மாத்திரம் வந்துகொண் டிருந்தது. அவன் இருந்த இடத்தைச் சிகரெட்டின் தணல் துனிதான் குறித்தது. இருளின் கண். வெளியே அடை மழை. இப்போதைக்கு நிற்குமெனத் தோன்றவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/104&oldid=1283316" இலிருந்து மீள்விக்கப்பட்டது