பக்கம்:கங்கா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 நெஞ்சில் திடம் ஊறுவது உணருகிறேன். மறுபடியும் என் தேடலில் முனைகிறேன். கிரேக்க இதிகாசத்தில், கடவுளரின் கோபத்துக்கிலக் காகி விட்ட ஒரு வீரனின் கதை வருகின்றது. பாலையில். அவனை சங்கிலியால் ஒரு பாறையுடன் பிணைத்துப் போட்டிருக்கிறது. பகல் எல்லாம் ஒரு கழுகு அவன் தோள்மேல் அமர்ந்து அவன் உடலைக் கிழித்து மாமிசத்தைக் குடைந்து தின்று விட்டு அந்தி வேளைக்குப் பறந்து போய் விடுகிறது. இரவில், அவனுக்கு குறைந்த சதை வளர்ந்து விடுகிறது. விடிந்ததும் மறுபடியும் கழுகு தன் இரைக்கு வந்து விடுகிறது. சொல்லின் தன்மையும் இப்படித்தான். என் தோள் மேல் அமர்ந்து அது என்னைக் கொத்துகையிலேயே என்னின் புதுப்பித்தலை உணர்கிறேன். நடந்து கொண் டிருப்பதுதான் திரும்பத் திரும்ப நடந்து கொண்டிருக் கிறது. இத்தனை கதைகள் எழுதியதும், இனி எழுதப் போவது எத்தனை யானாலும், அத்தனையும் நித்தியத் துவத்தின் ஒரே கதையின் பல அத்தியாயங்கள்தான். அத்தனையும் ஒன்றாக்க எனக்கு சக்தியோ ஆயுளோ போதாது. என்னால் முடிந்தது ஒரு சொல்தான். அச்சொல்லின் உருவேற்றல் தான். இதுவே என் தீர்ப்பாளர்களுக்கு என் சொல் என்னை, சொல்லச் செய்யும் வாக்குமூலம். 4-1 i-1962 லா. ச. ராமாமிருதம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/11&oldid=764282" இலிருந்து மீள்விக்கப்பட்டது