பக்கம்:கங்கா.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

கங்கா


தாக்காதபடி லாகவமாய் விலகிக் கொள்ளும் சாமர்த்தியம். அவனுக்கிருந்தது. ஆகையால் அவைகளின் வேகம் முழுவதையும் அவள் மேலேயே விழுந்தது. ஒவ்வொரு சச்சரவையும் சாவகாசமாய்த் தனக்குத்தானே அலசிப், பார்த்துக் கொள்கையில் தர்க்கத்திற்குக் காரணம் அவனாயிருக்கமாட்டான். "நீயே பார், நானா பண்ணி னேன்?’ என்று அவன் சுட்டிக்கூடக் காண்பிப்பதில்லை. எந்தக் காரியத்தை அவள் அத்தனை இடும்பு செய்து சாதித்துக் கொண்டாளோ, சாதித்த பின்னர் அதன் சக்கைத்ான் அவளிடம் எஞ்சிற்று அதன் வெற்றியும் சுவையும் அவன் புன்னகையில் உதட்டோரம் சுழித்த குழிகளில் தங்கிப் போயின. அதற்காக அவள் எடுத் தாடிய சொருபங்களே அவளைக் கேலி செய்தன. பிறந்த வீட்டில் அவள் அழுச்சாட்டியங்களுக்கு அப்பா பயந்து கீழ்ப்படிந்து போவார். ஆனால் இங்கோ அப்படியில்லை. தும்பையறுத்துக் கொண்டு பின்னங்கால்களை உதைத்துக் கொண்டு துள்ளி, குடல்தெறிக்க எங்கென்று கூடத் தெரி யாது ஒடும் கன்றுக்குட்டியின் விடுதலையில் எவ்வளவு பொய்மையும் கேலிக்கிடமும் இருந்ததோ அப்படித்தான் முடிந்தது, அவளுடைய சொருபங்களின் வியர்த்தம். ஆனால் அவனையும் எப்படி அத்தனை சிநேகி தர்கள் ஈ மாதிரி மொய்த்தார்கள்? அவளுக்கு ஆச்சரியமா யிருக்கும். "உடம்பு சிரமமாயிருக்கிறது" என்று சாக்குச் சொன்னாலும் "சரிதாம்பா வீட்டை அடைகாத்தது போதும் நாங்கள் வேணுமானால் காலைப் பிடிக் கிறோம்” என்று குண்டுக் கட்டாய்த் துரக்கிக்கொண்டே போய்விடுவார்கள். தன் கணவன் எத்தனையோ விஷயங். களுக்கு நடுநாயகமாக விளங்கியது கெளரிக்கும் பெருமை, சந்தோஷந்தான். ஆனால் தன் அசூயையே மனதில் உறுத்தி உறுத்தி, அரித்துத் தள்ளிக் குவிந்து மலையாகியளித்த காகஷி அவளுக்கே பயமாயிருந்தது. இவ்வளவு பெரிய குப்பை மேடா நான் ? ஏன் இப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/124&oldid=1283329" இலிருந்து மீள்விக்கப்பட்டது