பக்கம்:கங்கா.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岔肝,夺。剪厝。 #35 ‘ஓ’ன்னு கூப்பாடு போட்டு அழறேன். நான் அழ அழ, அவங்க சிரிச்சிண்டேயிருக்கான்கள். வயத்தைப் பிடிச் சுண்டு விழுந்து விழுந்து சிரிக்கிறான்கள். மதனாவுக்குப் புரைக்கேர்றது. ஒரு கையால் வயத்தைப் பிடிச்சுண்டு, ஒரு கையால் தலையில் தட்டிக்கிறான். கொஞ்ச நாழிக்கெல்லாம் அவங்க சிரிப்பு எனக்கும் தொத்திக்கிறது. என் அழுகை, என் இஷ்டமில்லாமலே, என் கண்ணெதிரிலேயே, என் காது கேக்கவே சிரிப்பாய் மார்றது. மூணுபேரும் சேர்ந்து சிரிக்கிறோம். ஒரே சிரிப்பு ! ஒரே சிரிப்பின் மூணு குரல். ஆர்மோனியத்தில் மூணு பல்லை சேர்த்து அமுக்கின மாதிரி. மதனா, ஸாயி, இப்போ நீங்கள் எங்கிருக்கேளோ ? ஆனால், அன்னிக்கு அது படே ஜோக்குடா ! 净、 ஆனால், இந்தச் சிரிப்பு என்னை விடவில்லை. இத்தனை நாளாவே உள்ளே இருந்ததுதான்; இப்போ இன்னும் பளிச்சாத் தெரியறது. அப்பா யாரையாவது பத்தி ஏதாவது சொன்னால், "அவன் மஹா யோக்யன்னா, மஹா பெரிய மனுஷன், மஹா கர்வி"-"மஹா மஹா'ன்னு சேர்த்துப்பார். அது மாதிரி இது ஒரு "மஹா சிரிப்பு, உடம்புக்குள்ளேயே அடுக்கடுக்காய், தனித்தனி விள்ளலாய் குதிக்கிறது. விசிறியில் ஓலை மடிமடியாயிருக்கிற மாதிரி. ஸ்ர்க்கஸ் காலரி மாதிரி. கோவில் கோபுரத்தில் செதுக்கல்கள் அடுக் கடுக்காய், தனித்தனியா, ஆனால், ஒரே கட்டாய் நிக்கற மாதிரி, பருப்புத் தேங்காயில், வரிசையாய் வேர்க்கடலைப் பருப்பு பதிஞ்ச மாதிரி. மைசூர்பாகு துளைவிட்ட மாதிரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/149&oldid=764325" இலிருந்து மீள்விக்கப்பட்டது