பக்கம்:கங்கா.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఖిr . తొ; FIF. 13% "ஊம், வழி-” மனலேயில்லை. வில்லைக் கலைச்சு உடம்பைத் தளர்த்திண்டேன். "பூம்ரொய்ஞ்ஞ்......" திடீர்னு உடம்பெல்லாம் அதிர்ந்தது. வளைச்ச வில்லி லிருந்து அறுந்த நாணாய், என்னுடைய மஹா சிரிப்பு சத்தம் போடாமல் சிரிச்சுண்டே கால் கட்டை விரலி லிருந்து உள்னே கிளம்பிடுத்து. அப்பா என்னைத் தாண்டிண்டிருந்தார். நான் என்ன செய்யறேன்னு எனக்கே தெரியறது; ஆனால் அடக்க முடியவில்லை. தமாஷ் அப்படி உடம்பை ஊடுருவித்து. அப்பா காலுக்கு நடுவில் என் காலை விட்டேன். அப்பா ஸர்க்கஸ் பல்டி அடிச்சு விழுந்தார். அம்மி விளும்பில் மூஞ்சி டண்ணுனு மோதி அப்பாவுக்கு தலை தொங்கிடுத்து. நெற்றியில் ரத்தம் பிடுங்கிண்டுடுத்து. சப்தம் கேட்டு அம்மா சமையலுள்ளிலிருந்து ஓடி வந்தாள். பூனை எலியைக் கவ்வற மாதிரி கிலி என்னைக் கவ்வித்து. - "வேவே- ஆவூ”- வாயிலிருந்து எனக்கே புதிசா ஏதேதோ சப்தங்கள் கிளம்பித்து. சிட்டாய்ப் பறந் துட்டேன். அன்னிக்கு வீட்டை விட்டவன்தான். இன்னமும் ஓடிண்டிருக்கேன். அப்பா, அப்பா ! நீங்கள் உடனே செத்துப் போயிட். டேளா, இன்னும் உசிரோடிருக்கேளா ? ஆனால், சத்தியமாய்ச் சொல்றேம்பா, உங்களைத் தடுக்கிவிட்டது நான் இல்லேப்பா, என் சிரிப்பு. சத்திய,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/151&oldid=764328" இலிருந்து மீள்விக்கப்பட்டது