பக்கம்:கங்கா.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடிவெள்ளி கோஷம் ஆகாயத்தைப் பிளந்தது. "மார்ணிங் ஸ்டார் : மார்ணிங் ஸ்டார் : கம் ஆன் கம் ஆன் மார்ணிங் ஸ்டார் -" "இல்லேடா அதோ பார், எவர் ரெடி வருதுவந்துாட்டுது எவர் ரெடிதான் ! எவர் ரெடி எவர் ரெடி 11-" “யாரப்பா ஜாக்கி ?” ‘போடா முட்டாள் பணம் அத்தினியும் மார்னிங் ஸ்டார் மேல்தான் கட்டியிருக்கேன் - அப்புவையன் ஆரூடம்டா பொய்க்காது இன்னிக்குக்கூட விபூதியும் குங்குமமும் குலுக்கிப் போட்டுப் பார்த்தேன். குங்குமப் பொட்டலம்தான் கைக்கு வந்தது. பிள்ளையாரே, உனக்கு ஒரு காலனா கற்பூரம் -மார்ணிங் ஸ்டார் : மார்ணிங் ஸ்டார் !" குதிரைகள் திருப்பத்தில் விரட்டியடித்துக் கொண்டு வருகின்றன, மார்ணிங் ஸ்டாரின் கால்கள் பூமியில் பதிவதாவேத் தெரியவில்லை ; தரை மட்டத்துக்கு ஓர் அடி பரப்பி அந்தரத்தில் நீந்துகின்றன. "மார்ணிங் ஸ்டார் : மார்னிங் ஸ்டார் : ; - பார்த் தையாடா நான் அப்பவே சொன்னேனே, மார்னிங் ஸ்டார் ! நம்ப சந்து பிள்ளையாருக்கு சக்தி ஜாஸ்திடா : ஒரு நாளும் என்னைக் கைவிடமாட்டார். நீ என்ன லைட்னிங் மேலேயா கட்டினே ?-சரிதான் ; பணமும் லைட்னிங்தான் -அப்பப்பா கண்டெடுத்தேன், அம்மம்மா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/158&oldid=764335" இலிருந்து மீள்விக்கப்பட்டது