பக்கம்:கங்கா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

கங்கா


அலுப்பாவா இருந்தது? இடமில்ாது இரவெல்லாம் நின்று கொண்டே போனேன். ஆனால் புஷ்பக விமானத்தில் போய்க் கொண்டிருந்ததாகத்தான் தியானம். அதிலிருந்து இதுவரை நான் செய்த ரயில் பிரயா ணங்கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன.நினைவுகள் பின்னோக்கிப் பாய்ந்தன. தகப்பனாருக்கு உடம்பு சரியில்லை எனத் தந்தி வந்ததும் அலறியடித்துக்கொண்டு ஒடியது; காலேஜ் நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து திருவனந்தபுரம் போய் ஜாலியாய்'ச் சுற்றியது. அடுத்தபடி காலேஜ் படிக்க ஊரிலிருந்து பட்டணத் துக்கு வண்டியேறுகிறேன். அந்தக் குட்டி ஸ்டேஷன் இரும்புக் கிராதிகளுக்கருகில் என் தகப்பனார், சிறு கூன் விழுந்த நலிந்த உடம்புடன் நின்றுகொண்டு, வண்டி நக்ருகையில் அன்பு:கணிந்த முகத்துடன் என்னை ஆசீர் வதிக்கும் பாவனையில் கையைத் துக்கிக் காண்பிக்கிறார், உணர்ச்சி மிக்கால் தொண்டை அடைத்தது. இப்போது போல் இருக்கிறது. பிறகு, அதற்கும் முன்னால், நான் பள்ளிக்கல்வி முடிந்ததும் விடுமுறைக்குக் கள்ளிக்கோட்டை யில் வேலையாயிருந்த என் மாமன் வீட்டுக்குச் சென்றது. அந்த ரயில் ஞாபகம் வந்ததும் “கங்கா" எனும் நாமம் உள்ளத்தின் அடிவாரத்தினின்று ஜ்வலித்துக் கொண்டே எழுந்து திகிரிபோல் சுழன்றுகொண்டே வந்து மார்பில் மோதியது. அதிர்ச்சி தாங்காமல் பெஞ்சியின் மேல் அப்படியே சாய்ந்தேன். கங்கா கங்கா !! நாக்கு சுழன்று சுழன்று வாயை நிறைத்தது. சப்தம் உள் நிறைந்து மேலும் வழிந்தது. என்னுள் வெள்ளம் புரண்டது. எப்போது பார்த்த கங்கா ! இப்போது எங்கிருக் கிறாளோ? மறுபடியும் அவளைக் காண்பேனா ? என் கங்காவைப் போய்த் தேடினால்தான் என்ன ? எங்குதான் அவள் இருப்பாள் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/16&oldid=1283256" இலிருந்து மீள்விக்கப்பட்டது