பக்கம்:கங்கா.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

கங்கா


நம்புவது வேறு ; இவை எல்லாவற்றையும் தாண்டி, ஆம்-பாரு, பாச்சா, குழந்தைகள், செல்லா வீடு, அப்பா, வந்திருக்கும் நோயாளி, அவன் நோய், எல்லா வற்றையும் தாண்டிய உண்மை இருக்கிறதே அதுவேறு. இதெல்லாம் வந்தவனிடம் ஏதுக்கு ? வெறுமெனே "சொல்லுங்கள்” என்றேன். "டாக்டர், வேலைபோய் மூன்று மாதங்கள் ஆச்சு, இன்னும் விடியவில்லை. வீட்டு வாடகை, பால்காரன், மளிகைக் கடை, எங்கேயும் பாக்கி-” நான் கையமர்த்தினேன். "அதற்கெல்லாம் மருந்து எனக்குக் கூட அகப்படவில்லை. நீங்கள் போக வேண் iq.its இடம், கோவில், ஜோஸ்யன் Employment Exchange—” "டாக்டர், கொஞ்சம் பொறுங்கள். நான் யாரிடம் தான் சொல்லிக்கொள்வது ? கைக் குழந்தைக்கு வயிற்றில் கட்டி. ராப்பகலாய் வராட் வராட்டெனக் கத்திப் பிறரையும் துரங்கவிடுவதில்லை. "எதிர் வீட்டுக்காரன் நாய் வளர்க்கிறான். அந்தப் பெருமையில் நாயை கேட்டில் கட்டிப் போட்டிருக் கிறான். போவோர் வருவோர் மேல் அது பாய்கிற தினுசையும் குரைக்கிற தினுசையும் பார்த்தால், எந்த நிமிஷம் சங்கிலியை அறுத்துக் கொள்ளுமோ, தெருவில் விளையாடும் என் குழந்தைகளுக்கு என்ன நேர்ந்து விடுமோ எனக் கதி கலங்குகிறது. இன்று காலை என் நிலையைப் பற்றித் திடீரென என்னவோ யோசனை வந்து விட்டது. புழுங்கிக் கொண்டு வாசல் ஜன்னலில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். "பால்காரன் பசுவை ஒட்டிக் கொண்டு எதிர் வீட்டு லாந்தர் கம்பத்தில் கட்டினான். மார் உயரம் பசு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/180&oldid=1283363" இலிருந்து மீள்விக்கப்பட்டது