பக்கம்:கங்கா.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

173


"உன் பணமாயிருந்தால் என்ன, நீ இந்த வீட்டுப் பெண்தானே ! நான் சொல்கிறேன் நீ கொடு" என்றே ன் பாருவின் கண்களில் கனல் கண்ணிராய்த் தளும் பிற்று. விர்ரென்று வெளியே சென்று, ஒரு நிமிஷத்திற் கெல்லாம் ஒரு ஒலைப் பெட்டியை வீசியெறிந்துவிட்டு ஓடினாள். அது என் காலடியில் வீழ்ந்தது. குனிந்து எடுத்துக் கொண்டேன். எனக்குக் கோபம் வரவில்லை. ஏன் எனக்கு இப்படி சுரணையில்லாமல் போய்விட்டது? நாய்குட்டியைப் பார்ப்பதுபோல் இனி என்னையும் காதைப் பிடித்துத் தூக்கித்தான் பார்க்க வேணுமோ ? "இந்தா பாச்சா வெச்சுக்கோ." "அண்ணா, மன்னி மனம் கஷ்டப் படுகிறாள் "பாச்சா உன் மன்னி நல்லவள். அவள் சிரமப்பட்டு சேர்த்தது. ஆகைய்ால் இது நல்ல பணம்; நன்கு விளை யும்; எடுத்துக் கொள்.” பாச்சா இரவு வண்டி ஏறினான். அவனை வழியனுப்பி விட்டுத் திரும்புகையில் ஏதோ யோசனையில் சட்டென நடுவழியில் திகைப்பூண்டு மிதித்தாற் போல் நின்றேன். திடீரென்று எனக்கு ஒரு பழைய நினைவு வந்தது. சிறு வயதில் நானும் என் தம்பியும் இரவில் ஒரே கோரைப் பாயில் படுத்து உருண்டது. எங்கள் இருவருக்கும் ஒரே போர்வைதான். இதைத் தலைமேல் இழுத்துப் போர்த்திக் கொண்டு அந்த உள் இருட்டில் விளையாடுவோம். பாதி ராத்திரியில் எனக்கு விழிப்பு வரும்போதெல்லாம் பாச்சா வுக்குக் குளிருமே என்று போர்வையை இழுத்து இழுத்து அவன்மேல் மூடுவேன். அவன் அதை உதறி உதறித் தள்ளிவிட்டு தூக்கத்தில் தடாலென வயிற்றில் காலைப் போடுவான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/187&oldid=1283366" இலிருந்து மீள்விக்கப்பட்டது