பக்கம்:கங்கா.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

கங்கா


வரிக்க மாட்டேனா என்று ஜாடை மாடையாய்ப் பேச்சு விட்டுத் திரட்டிப் பால் காய்ச்சிக் கொடுத்து ("உங்களுக் கென்றே, தனியா திட்டமா, ஸ்பெஷலா, வெல்லம் தாழ்ந்து, பால் மணக்க ') நோட்டம் பார்க்கிறாள். கண் போனாலும் இதெல்லாம் வெளிச்சம் போட்டுத்தான் தெரிகிறது: "என்னம்மா, தாத்தா மேலே வாசனை தூக்கறதே ?” "தின்கற பண்டம்னா இதுகளுக்கு எப்படித்தான் மூக்கிலே வேர்க்கிறதோ ? ஏண்டி அமலி, இந்தக் கிண்ணம் எப்படி இப்போ இங்கே வந்தது ?" “என் சொத்து." "என்ன உன் சொத்து, நீ வாங்கினது தட்டுக் கெட்டுப் போனது ? இங்கிருந்து தட்டிக் கொண்டு போனதுதானே ஏன் கவலைப் படறே, இத்தோடு நீ சேர்த்து ஆள இதன் ஜோடியைக் கொண்டு வந்திருக் கேன் பார் ! என் வீதத்துக்கு அம்மா கொடுத்தது. இதைத்தான் உன் பிள்ளைக்கு ஒதியிடப் போகிறேன்.” அமலிக்கு முகம் கடுக்கிறது. - "இந்த மட்டும் நினைவாக இத்தனை நாள் காப் பாற்றி, சமயத்துக்கு கொண்டு வந்தாயாக்கும் !" "சந்தேகமா? என் குடும்பக் கஷ்டத்தில் மார்வாடிக் கடையையோ வெள்ளிக் கடையையோ பார்க்கப் போகாமால் இதுவரைக்கும் என்னிடம் இருந்ததே உன் அதிர்ஷ்டண்டீ !” "அந்தக் கிண்ணமும் வேண்டாம் ; அத்தோடு நீ ஒதற அதிர்ஷ்டமும் என் பிள்ளைக்கு வேண்டாம் !" விமலி மேலுதட்டைக் கீழுதட்டால் கடித்து, நாவில் துடிக்கும் பதிலை இழுத்து விழுங்குகிறாள். விமலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/196&oldid=1283373" இலிருந்து மீள்விக்கப்பட்டது