பக்கம்:கங்கா.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

கங்கா


என்னவோ, அது என் காதுக்கெட்டாமல்-அது அப்பா வின் பத்ரம் போலும். தந்தை வழி மகன். அப்பாமேல் எனக்கு அன்பு இல்லையா? நன்றி யில்லையா ? மதிப்பில்லையா? ஆனால், கண்ணிர் இல்லை. அன்றிரவு ரயிலேறிக் காலையில் ஊர் போய்ச் சேர்ந்தேன். வாசலில் வண்டிச் சத்தம் கேட்டு அம்மா உள்ளிருந்து ஓடி வருகிறாள். அவளைத் தாங்கிக்கொண்டு நாலுபேர், அம்மா என்னைக் கட்டிக்கொண்டு கதறுகிறாள். நான் என்னை விடுவித்துக் கொள்ள முயல்கிறேன். என்னில் எழும் வெறுப்பை, முகத்திலிருந்து மறைக்க நான் முயற்சி கூடச் செய்யவில்லை. அவள் மேல் இப்போது எனக்குத் துளிக்கூட இரக்கம் தோன்றவில்லை. பிள்ளை மனம் கல். என் கண்களைக் கண்டதும் திகைத்து அம்மாவே பின்னடைகிறாள். பிறகுதான் பரிதாபம் கசியலாமா வேண்டாமா எனப் பார்க்கிறது. உயிரையே கொடுத்து அப்பா-பிறகு, அல்லஅதற்கு முன்னாலிருந்தே அம்மா-இப்போது கமலி, இவர்கள் அபரிமிதமாய்த் தங்கள் அன்பை என்மேல் கொட்டி, லஞ்சம் கொடுத்து என்னிடமிருந்து எதைப் பறிக்கப் பார்க்கிறார்கள் ? என்னையேவா ? அல்ல; அவர்கள் அன்பை என்னால்தான் புரிந்துகொள்ள முடியவில்லையா ? புரிந்துகொள்ளவே ஒன்றுமில்லையா ? என்னைத் தன்மயமாய் விழுங்கும் அன்புக்கு என்னால் விட்டுக்கொடுக்க முடியவில்லையா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/210&oldid=1283382" இலிருந்து மீள்விக்கப்பட்டது