பக்கம்:கங்கா.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

197


குழம்புக்கொரு கிண்ணம் ரஸ்த்துக்கொரு கிண்ணம் மோருக்கொரு கிண்ணம் நான் என் நினைவுகளிலிருந்து மீண்டபோது, நாங்கள் இருவர் மாத்திரம் ப்ளாட்பாரத்தில் தனித்திருந்தோம். "கமலி, நம்மிடையில் இனி கிண்ணங்கள் குறுக்கிட வேண்டாம்.” அவள் கை என் கையுள் உயிரற்றுக் கிடந்தது. கன்னங்களில் அருவிகள் பளபளத்தன. கிண்ணங்களை ஒதுக்கி விடலாம், ஆனால், எண்ணங்கள் ? ★ 演 ★ மணவறையில் முதலிரவு. கமலி ஜன்னலோரமாய் நின்று கொண்டிருக்கிறாள். கூஜாவிலிருந்து பாலைக் கிண்ணத்தில் விளிம்புவரை ஊற்றுகிறேன். கீழே துளியும் சிந்தாதபடி, என் சமாதா னத்தை இரு கைகளிலும் ஏந்தி, ஜாக்கிரதையாய் அடி மேல் அடிவைத்து அவளிடம் செல்கிறேன். என் அரவம் கேட்டு முகம் என் பக்கம் திரும்புகிறது என்னைக் கண்டதால் கண்களில் ஒரு வினாக்கூடத் தோன்றவில்லை. கிண்ணத்தை அவளிடம் நீட்டுகிறேன். என்னிடமிருந்து கிண்ணத்தை வாங்கிப் பாலைக் கீழே ஊற்றுகிறாள். படக்கென்று ஆத்திரத்துடன் சாய்க்க வில்லை. தீர்மானத்துடன், நூலருவியாய் ஒரே நிதானத் தில் சிந்திக் கொண்டேயிருக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/211&oldid=1283383" இலிருந்து மீள்விக்கப்பட்டது