பக்கம்:கங்கா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6呜*。母。**。 இ. என் ஆண்மைக்குப் பங்கம். இனி இந்தக் கைகள் இரண் டும் என்னுடைய்னவல்ல. வலிக்கிறதா ? வலிக்கட்டும் ! நன்றாக வலிக்கட்டும் கழன்றே போகட்டும். அப்புறம் மடியில் கிடத்திக்கொண்டு அழலாம். இப்போதைக்கு இருக்கிறவரை கங்கா எதிரே மானம் போகாமல் அடி. நான் தன்னிரக்கத்தில் தவித்துக்கொண்டிருக்கையிலே டாங்கிலிருந்து ஜலம் வழிந்து தலைமேல் கொட்டும். ஏற்கெனவே உடல் வேர்வையில் நாய்க்குட்டிபோல் தலையை உதறிக்கொண்டு கிளம்புவேன். வாசற்படியில் கங்கா சிரித்துக்கொண்டே டம்ளரும் கையுமாய்க் காத்திருப்பாள். "இந்தா!' "எனக்கு ஒண்ணும் வேண்டாம்-1” "நான் என் கைப்படப் போட்டேனாக்கும் காப்பி: சாப்பிடமாட்டையா ?’ திடீரென்று என்னை மாவுப் съ * w aro - o பொம்மையாய் ஆக்கிவிட முடிகிறது அவளால, பதில் பேசாமல் டம்ளரை வாங்கிக் கொள்வேன். "அடேயப்பா, இந்தக் கிழக்கத்திக்காராளுக்குத் தான்என்ன தேவrயம் ! ஐயோ! சொட்டச் சொட்ட நிக்கிறாயே இதோ டவல் கொண்டுவரேன்..." என்று உள்ளே ஓடுவாள். நான் குச்சு நாய் மாதிரி காத்திருப்பேன். நீ இன் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தேன். மாமா எதிரே மேஜையில் ஆபீஸ் வேலை செய்து கொண்டிருந்தார். காளியாய் அழுது கொண்டிருக்கும் தன் மன்னியின் கைக்குழந்தையைத் துரக்கிக் கொண்டு வந்து கங்கா ஊஞ்சலில் உட்கார்ந்தாள். குழந்தையை சமாதானப் படுத்துவதற்காக ஊஞ்சலை ஆட்டினாள். சற்று நேரம் கழித்து, மாமா முக்குக் கண்ணாடியைச் சற்றுத் தாழ்த்தி, அதன் பின்னிருந்து எட்டிப் பார்த்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/23&oldid=764399" இலிருந்து மீள்விக்கப்பட்டது