பக்கம்:கங்கா.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

கங்கா


கொண்டு, பேஷ் இதுதான் நன்றாயிருக்கிறது ! பேஷ் !" என்றார். "என்னது ?" என்றாள். "எனக்கு லாலி ஒன்று தெரியும். முதலடி மறந்து போச்சு இரு இரு வந்துட்டேன்” என்று மாமா கூரை யைப் பார்த்துக் கொண்டே கையைச் சொடுக்கினார். "போங்கோ மாமா ! நான் கலியாணமே பண்ணிக்கப் போறதில்லே : "பின் என்ன பண்ணப் போகிறாய் ? காளன் ஒலன் இளவன் அவியல் எல்லாம் பண்ணி யாருக்கு போடுவாய்?" "நான் டாக்டருக்குப் படிக்கப் போறேன்." "ஜய " மாமா கிண்டலாக மார்பில் அடித்துக்கொண் டார். நீ பள்ளிக்கூடம் போற ஒழுங்குக்கும் படிக்கிற லக்ஷணத்துக்கும் ' கங்காவுக்கு முகம் கோவைப் பழமாய்ச் சிவந்து விட்டது. கோபக் கண்ணிர் துளும்பிற்து. கங்கா எல்லா பாடங்களிலும் ஒற்றை லக்க மார்க்கு. கணக்கில் பெரிய, இட்டா. ஆத்திர்த்துடன் குழந்தையை இரண்டு அறை அறைந்து ஊஞ்சலை இன்னமும் விசி ஆட்டினாள். ஊஞ்சல் குறுக்கு நெடுக்குமாய் ஆடியது. மாமாவுக்கு தன் சொத்தில் கவலை வந்துவிட்டது. "ஊஞ்சல் ஜாக்கிரதை சுவத்திலே இடிக்கிறது !” சடக்கென்று கங்கா ஊஞ்சலை நிறுத்தின வேகம் என்னை முன்னுக்குத் தள்ளிற்று. இருவரும் மண்டையில் இடித்துக் கொண்டோம். கங்கா குழந்தையை எடுத்துக் கொண்டு வேகமாய் அங்கிருந்து சென்றாள். அவள் கோபமும் அவளுக்கு அழகாய்த் தானிருந்தது. எனக்கு மாமா மேல் கோபம் கோபமாய் வந்தது. ஆனால் கங்காவுக்குப் படிக்க வணங்குவதில்லை. பாட்டு வாத்தியாரும் படிப்பு வாத்தியாரும் மாறி மாறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/24&oldid=1283262" இலிருந்து மீள்விக்கப்பட்டது