பக்கம்:கங்கா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@鹅”。守。伊疗。 f : வந்து போவார்கள். ஆனால் அவை இரண்டைத் தவிர பாக்கி எது சொன்னாலும் கங்கா செய்யத் தயார். அவள் காரியம் செய்வதும் விபரீதமாய்த்தானிருக் கும். திடீரென்று நினைத்துக் கொள்வாள் பற்றுப்பாத்தி ரங்கள் இன்னும் வேண்டாத சாமான்கள் அத்தனையும் போட்டுக் கொண்டு தேய்ப்பதற்கு முற்றத்தில் குந்திட்டு உட்கார்ந்து விடுவாள்.வேலைக்காரி ஒத்தாசைக்கு வந்தா லும் அவளைச் சீறித் தடுத்துவிடுவாள். ஆனால் பாதி தேய்த்துக் கொண்டிருக்கையிலேயே சலிப்பு வந்துவிடும். "இந்தாடி நாராயணிஎன்னத்தைப் பார்த்துண்டிருக்காய்? சம்பளம் வாங்கறாயே?’ என்று வேலைக்காரிமேல் எரிந்து விழுந்து சாமான்களை அவளிடம் வீசியெறிவாள். நாரா யணி சிரித்துக்கொண்டே வருவாள். இன்றைய பழக்கமா நேற்றையப் பழக்கமா அவளுக்கு கங்காவை கைக் குழந்தையாவே அவளுக்குத் தெரியுமே! அவள் சொல்லு வாள், சிரித்துக் கொண்டே “கங்கம்மை குடித்தனம் பண்ற போதேய்-1 வேடிக்கையாத் தானிருக்கும். சாதம் பாதி அரியாயிருக்கும், ரஸ்ம் காயாத புளிவெள்ளம். வேகாத உப்பேரி. இதுதான் இவள் புருஷன் ஊணுகழிக்கனும்: சமையல் வேகு முன்னையே கங்கம்மை அவசரத்தில் வெந்திடுவாள் !” ஒருநாள் கொட்டுகிற மழையில் சாக்கடையை அலம்பு கிறேன் என்று கங்கா துடைப்பத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள். சொட்டச் சொட்ட நனைந்தது போதா தென்று நடு முற்றத்தில் ஒரு டம்ளரை வைத்து, அதில் மழைத்துளிகள் விழுந்து நிரம்பியதும், அந்த ஜலத்தையும் குடித்துவிட்டாள். அன்றிரவே ஜூரம் வந்துவிட்டது. மூன்று நாட்கள் கங்கா கண்ணிலேயே படவில்லை. எசமானைக் காணாத நாய்க்குட்டிபோல் நான் வீட்டைச் சுற்றிச் சுற்றியலைந்தேன். அவள் உடம்பு பற்றி மற்றவர் களிடம் விசாரிக்கவும் லஜ்ஜை: என் கிலேசமும் எனக்குப் புரியாத ஊமையடி. ஆனால் அவள் வீட்டாரும் அவளைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/25&oldid=764401" இலிருந்து மீள்விக்கப்பட்டது