பக்கம்:கங்கா.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

கங்கா


பற்றி ஒன்றும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவர்கள் பாட்டுக்கு சிரித்துக்கொண்டும், கொம்மாளம் அடித்துக்கொண்டும் தின்றுகொண்டும் சண்டை போட்டுக் கொண்டும் அவரவர் ஜோலியில் சர்வசாதாரணமாய் ஈடுபட்டிருந்தனர். நான் வாசற்புறத்தில் நின்றுகொண்டு அங்கிருந்த பூச்செடிகளைப் பார்த்துக் குருட்டு யோசனை பண்ணிக் கொண்டிருந்தேன். - எனக்கு ஒரு சிறு தலைவலி ஏற்பட்டால்கூட அம்மா வும் அப்பாவும் நிமிஷத்திற்கு நிமிஷம் தொட்டுப் பார்ப் பார்கள் நோயாளிக்குக் குணமாகும் வரை வீட்டிலேயே திண்பண்டங்கள் புழங்காது. சமையல்கூட எல்லோருக்கும் கட்டுப்பாடாய் இருக்கும். தன்னைப் பட்டினி போட்டு மற்றவர்கள் தின்கிறார்களே என்று நான் நினைக்கக் கூடாது எனும் பரிவு, ஆனால் இங்கோ, ஒருவருக்கும் தன் தீனியில் செளகரியத்தில் ஒரு இம்மி குறைந்ததாய்த் தெரியவில்லை. என்னதான் இருந்தாலும் கங்கா தாயில் லாக் குழந்தைதானே ! "ஒய்-1-கைதட்டல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். "இந்தப் பக்கம் நோக்கட்டும்-” மாடியிலிருந்து கங்கா சிரித்தாள். முகம் சுண்டி யிருந்தது; மயிர் பரட்டையாய்க் காற்றில் அலைந்தது. "என்ன பண்ணறாய் ? கண்ணிலேயே காணவில் லையே, மேலே வாயேன் ! நான் தலையை அசைத் தேன். மேலே போக இஷ்டம்தான். ஆனால் இந்தப் பாழா போற லஜ்ஜை ! அவள் கையில் பச்சையாய் ஏதோ தெரிந்தது."கையில் என்னது?" என்றேன். கையை நீட்டினாள் மாங்காய்! "உனக்கு வேணுமா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/26&oldid=1283263" இலிருந்து மீள்விக்கப்பட்டது