பக்கம்:கங்கா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

13


வேண்டாமென்று தலையை ஆட்டினேன். அவள் மாங்காயைக் கவ்விக் கடித்துத் தின்ன ஆரம்பித்தாள். இப்போ புரிந்தது. கங்காவின் உடம்பைப் பற்றி அவள் வீட்டிலேயே யாருக்கும் கவலைப்பட்டுக் கட்டுப்படிஆகாது கங்கா சூரியனின்று கழன்று தப்பி பூமிக்கு ஓடிவந்துவிட்ட பொற்கதிர். பொறுப்பற்ற பொற்கதிர்தான். ஆனாலும் அவள் கவர்ச்சியே அவள் பொறுப்பற்ற தன்மையில்தான். எஸ்.எஸ்.எல்.ஸி. பரீகூைடி முடிவுகள் பிரத்யேகமாய்க் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. நான் "பாஸ்” எல்லா பாடங்களிலுமே நல்ல மார்க்கு வாங்கியிருந்தேன். மாமா வீட்டில் எல்லோருக்கும் சர்க்கரை வழங்கினார். கண்ணாடி தட்டிலிருந்து கங்கா அள்ளிஅள்ளி இரண்டுவாய் போட்டுக் கொண்டாள். அதைப் பற்றி எனக்குள்ளேயே நான் தனி அர்த்தம் பண்ணிக்கொண்டு எனக்கே ஆனந்தப்பட்டுக் கொண்டேன். ஆனால் அவள் அண்ணன் பரீகூைடியில் மறுபடியும் "டக் அடித்துவிட்டான். அவள் தகப்பனார் வீடு அதிர இரைந்தார். உடனோடொத்தவனைப் பார்த்துக்கோடா -உன்னைவிட நாலு வயசு மட்டு. அவன் கிளாஸ் ஏறிண்டே போகட்டும். நீ படிப்படியா ஓம் நாராயணாய நம:வுக்குப் போயிண்டேயிரு" என்று என்னை ஒப்பிட்டு அவனைக் கடிந்துகொண்டது பையனுக்குப் பொறுக்க வில்லை. அன்று மாலை வாசற்புறத்தில் காம்பவுண்டிற்குள் இசை கேடாய் ஒரு மூலையில் அவனிடம் தனியாய் மாட்டிக் கொண்டுவிட்டேன். வலுச்சண்டைக்கிழுத்து என்னை ஓங்கி ஒரு அறை அறைந்தான். அந்தத் தடிய னுக்குச் சரியாய் என்னால் நிற்க முடியுமா ? அடிவேகம் என்னைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டே போய் சுவரில் மோதிக்கொண்டேன். முழங்கையில் அடி, கூவிக்கொண்டே ஓடிவந்து கங்கா அண்ணனை வாயில் வந்தபடி வைத்தாள். அவன் ஏளனமாய்ச் சிரித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/27&oldid=1283264" இலிருந்து மீள்விக்கப்பட்டது