பக்கம்:கங்கா.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

கங்கா


கொண்டே காளைமாட்டு நடை போட்டுப் போய்விட் டான். நான் முக்கிமுனகிக்கொண்டே எழுந்தேன். முழங்கையில் நெருப்பை வைத்துக் கட்டினாற்போல் இருந்தது. "ஐயையோ!" கங்கா என் கையைப் பிடித்தாள். முழங் கையில் ரத்தம் வழிந்தது. சதை அறுந்து தொங்கிற்று. "போ!' என்று அவள் கையை உதறினேன். எனக்கு அழுகை வந்துவிட்டது. அடியின் வலி ஒரு பக்கம்; அதை விட நான் உதைப்பட்டதை அவள் பார்த்து விட்டாளே எனும் அவமானம் இன்னொரு பக்கம் இப்பொழுது நான் அழுவதையும் பார்க்கிறாளே என்று நினைக்கையிலேயே அழுகை இன்னும் உடைப்பெடுத்துக் கொண்டு வந்தது. கங்கா ஓடிப் போய், கையில் தேங்காயெண்ணெய் சீசாவுடனும், பஞ்சும் துணிக் கிழிசலுடனும் திரும்பி ஓடி வந்தாள், நான் சொல்லச் சொல்ல, நான் சொல்வதை சட்டை செய்யாமல் என் அருகே மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டு பஞ்சை எண்ணெயில் தேய்த்து புண்ணில் அப்பினாள். வாய் ஓயாமல் அண்ணனை வசைபாடிக் கொண்டிருந்தது. "சவண்டிக் கொத்தனை அப்பாவிடம் சொல்லி நன்னா சாடச் சொல்றேன் !” அவள் கவனம் முழுவதும் அண்ணனைத் திட்டுவதி லும் காயத்தைக் கட்டுவதிலும் ஊன்றியதால், கன்னத்தில் வழியும் கண்ணிரைத் துடைக்கக்கூட மறந்து நான் அவளைக் கவனிப்பதை அவள் கவனிக்கவில்லை. அப் புருவங்கள் தாம் என்ன சீராய் வளைந்திருக்கின்றன: மூக்குத்தான் என்ன எடுப்பு அந்தக் கண்கள்தான் எப்படி பேசுகின்றன! பெண்ணென்று ஆண்டவன் படைத்து விட்டால் அது எவ்வளவு சின்னக் குழந்தையானாலும், சமயத்தில் அதற்கு நூத்துக்கிழத்தின் தாய்மை எங்கிருந்து தான் திடீரென்று ஏற்படுகிறதோ ? கனலாய்க் கொதித்த கண்ணிர் திடீரென என் கன்னத்தில் பன்னிராய்க் குளிர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/28&oldid=1283265" இலிருந்து மீள்விக்கப்பட்டது