பக்கம்:கங்கா.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ga)訂・ *・ アfr。 2.É. குழம்பிய மனத்துடன் ஸ்டேஷனில் இறங்கினேன். ஊரில் மாறுதல் காணோம். வண்டியை வைத்துக்கொண்டு நேரே அவள் வீட்டுக்குச் சென்றேன். கங்காவின் தகப்ப னாரின் பேரைச் சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்: தேன். வேற்று முகங்கள் தென்பட்டன. ஆனால் ஊஞ்சலில் ஒரு ஆள் வெற்றிலைப் பெட்டியை எதிரே வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். பழகிய முகமாயிருந்தது. கவனித்ததில் கங்காவின் அண்ணன்; என்னை அன்று உதைத்தவன். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பிறகு பேர் பேராய் விசாரித்தேன். கங்காவின் தகப்பனார் காலமா, யாச்சு. சித்தி அவிருக்கு முன்னாலேயே தவறிவிட்டாளாம். வீட்டில் எதற்கோ தேவியம் கிணற்றில் விழுந்துாட்டாள். சொத்து எல்லாம் பங்காச்சு. கூட்டுக் குடித்தனம்போது நிறைய இருந்த ஆஸ்தி பங்கானதும் துளியாப் போச்சு. வீட்டிலே இப்போது தனித் தனியாய்ப் பத்து சமையல், வியாபாரம் ரொம்ப மந்தம். வருமானம் போதவில்லை. உங்கள் ஆபீஸில் ஏதாவது எனக்குத் தகுந்த பணி யுண்டோ? என்று கேட்டான். "கங்கா செளக்கியமா?" என் தொண்டை தழுதழுத்தது. யார் கண்டா ? பகி ரென்றது. "புக்ககத்தில்தானே யிருக்கிறாள் ?” என் கேள்வியின் அர்த்தமே எனக்குத் தெரியவில்லை. "இல்லாமல் என்ன ? அவள் இப்போ ரொம்ப ராங்கிக் காரி ஆயிட்டா. நாலைந்து வருஷங்களுக்கு முன்னே 'குடும்பம் கஷ்டப்படறது உன் ஆம்படையான்கிட்டேருந்து ஒரு இரண்டாயிரம் பணம் கடன் வாங்கிக் கொடு ன்னு எழுதிக் கேட்டேன். அதற்கு பதிலும் காணோம். அப்புறம் எங்கேயாவது ஒட்டிண்டுடுமோன்னு வேறு கடலாசும் கிடையாது. இந்தக் குடும்பத்தில்தான் பிறந்தாள் என்கிற தையே மறந்துாட்டா. உடன் பிறந்தது எல்லாம் எப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/35&oldid=764412" இலிருந்து மீள்விக்கப்பட்டது