பக்கம்:கங்கா.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரு - rேத்ரம் ලී(H விணங்குகிறேன். தாங்கள் விதித்தபடியே தங்களை யலாது தங்களை நான் குருவாய் வரித்த பாவனையை வணங்குகிறேன். தாங்கள் ஏன் என் கனவில் வரவில்லை ? தங்கள் உருவத்தை வெகுவாயும் மனத்தில் விளம்பிக்கொண்டு தாங்கள் வரவேணும் வரவேணும் என வேண்டி வேண்டிக் கிடந்தேன். தரிசனம் கிட்டவில்லை. தாங்கள் உருவங்களைக் கடந்த நிலையை எய்து விட்டதால், மறுபடியும் கனவிலும் கட்டுப்பட தங்களுக்கு மனமில்லையோ ? ஆனால், "நீ முழு நம்பிக்கையோடும் உண்மை யுடனும் என்னை நினைத்தால் நான் அப்போதே உன் கனவில் தோன்றக்கூடும்” என்று சொன்னீர்களே ! எனக்கு நம்பிக்கையும் உண்மையும் போதவில்லையா? தங்கள் மனம் இரங்கவில்லையா ? மன்னியுங்கள், மன்னியுங்கள். தங்களை இரக்க மற்றவர் என்று நான் கனவிலும் நினைத்து உய்வேனோ? உங்கள் அடைக்கல வார்த்தைகளை மறைக்கமுடியுமோ ? ·ණ්තු 凌 - "பூமியே வீடு, ஆகாசமே கூரையாயிருக்கையில், வந்தவனைப் போ என்றோ போவானை இரு என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/46&oldid=764424" இலிருந்து மீள்விக்கப்பட்டது