பக்கம்:கங்கா.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

கங்கா


கடைசியில், ஒரு குளத்தங்கரைப் படிக்கட்டில் உட்கார்ந்து, களவாடிய பர்ஸில் இருந்த பணத்தை, ஓடிவந்த மூச்சு இரைக்க இரைக்க எண்ணினேன். சில்லரையை விட்டுத்தள்ளு, பத்து ரூபாய் நோட்டுகள் சரியாய் முப்பது. நன்றாய்ப் பழகிய நோட்டுக்கள். நாலு பக்கமும் வீசி எறியாமல், நாலுபேர் கவனம் என் மேல் படாது செலவழித்தால், என் ஒண்டிக் கட்டைக்கு நாலு மாதங்களுக்குக் கவலையில்லை. எடுக்கிற விரல் துரு ஏறாமல் இருக்கவேண்டுமே என்கிற கவலை தவிர கோவில் ஸ்து பியைப் பார்த்து, பர்ஸை கண்ணில் ஒற்றிக் கொண்டேன். மாலை மறையும் நேரம், கோவிலில் சாயங்கால தீபாராதனையின் கொட்டு முழங்கிற்று. நீராழி மண்ட பத்துள் திடுக்கென்று ஒரு விளக்கு ஏற்றிக்கொண்டது. தோலும் சதையும் மெலிந்த ஒரு கிழவர் தலைமேல் கூப்பிய கைகளுடன் படித் துறைமேல் ஏறி வருகிறார்" ஒரு மாத்வ மாமி தீர்த்தப்ரதட்சணம் செய்கிறாள். என் மனம் திடீரென, எனக்கே வியப்பாயிருந்த ஒரு நிம்மதியை அடைந்தது. மறுநாள் காலை, அதே குளத்தின் பக்கமாய்ப் போய்க் கொண்டிருந்தேன். படித்துறையில் ஒரு சின்ன கூட்டம். நாலைந்து கைகள் ஜலத்தில் சுட்டிச் சுட்டிக் காண்பித்துக் கொண்டிருந்தன. காண்பித்த இடத்தில், ஒரு பெரிய துணிக் கொப்புளம் மிதந்தது. இந்த வேடிக்கையில் கலந்து கொள்ளாமல் இருக்க முடியுமா? மூணு தாண்டில் ஜலத்தின் விளிம்பையடைந்து நோக்கினேன். சிரம் மேல் கூப்பிய கைகளுடன் ஒரு உருவம் குப்புற மிதந்தது. நான் இரண்டாந்தரம் பார்க்க அவசியமே తివుతాయి. நேற்று நான் ஜேப்படித்த சாக்ஷாத் அதே ஆள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/52&oldid=1283280" இலிருந்து மீள்விக்கப்பட்டது