பக்கம்:கங்கா.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

47


விட்டது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. "நான் ஒன்றுமே பண்ணவில்லையே எந்தக் குழந்தையை ?" "அந்தப் பூ உன்னை என்ன பண்ணிற்று ? உங்க ளுக்கு எப்படித் தெரிந்தது ? அந்த வியப்புகூட உடனே தோன்றவில்லை. ‘தெரியாமல் செய்துவிட்டேன், தெரியாமல் செய்து விட்டேன்” என்றுதான் திரும்பத் திரும்ப வாயில் வருகிறது. "ஆத்மா எதையுமே கொல்லாமல் அனுபவிக்க முடியாதா ? ஏன் இப்படி பிள்ளைக்கறி தின்றுகொண்டே யிருக்கிறோம் ?” "தெரியாமல் செய்து விட்டேன்; என்னை மன்னித்து விடுங்கள்.” கருணை சொட்டும் உங்கள் முகத்தில் வேர்வை ஜல கண்டமாய் கொட்டுகிறது. “மன்னிக்க நான் யார் ? என் மன்னிப்பு அழித்ததைத் திரும்பத் தருமா ? ஆத்மா, உலகம் முழுதும் வியாபகம் ஒரு உயிர்-ஒரே உயிர்தான். அதன் உருவங்கள்தாம் பல் வேறு. ஒரு இடத்தில் கழுத்தை முறித்தால், உயிரின் வேதனையில் இன்னொரு இடத்தில் மார் உடைகிறது. நீ அங்கே பூவைப் பறித்ததும், இங்கே நான் விழுந்து விட்டேன்.” எனக்கு அழுகை வந்துவிட்டது. வெட்கமற்று தேம்பித் தேம்பி அழுகிறேன். "ஆத்மா, என்னை மன்னிப்புக் கேட்பதைவிட நீ அழுது, உன்னையே மன்னிப்புக் கேட்டுக் கொள்வதுதான் நியாயம். உன் காரியங்களின் எடையை அறிய நீயிருக் கையில் நான் யார் ? நான் அறிவதால் உனக்கு என்ன பயன் ? நீ அழுது, நீயே அறி. அவரவர் வழி அவரவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/61&oldid=1283285" இலிருந்து மீள்விக்கப்பட்டது