பக்கம்:கங்கா.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 கங்கண ருடையது. ஆத்மா, என் வழியின் முடிவு நெருங்கி விட்டது.” "அப்படிச் சொல்லாதேயுங்கள்- சொல்- லாதேயுங்கள் நான் என் செய்வேன்?” நீங்கள் புன்னகை புரிகிறீர்கள். "நீ செய்வதற்கு என்ன இருக்கிறது?” சற்று நேரம் இருவரும் பேசாமல் இருக்கிறோம். என் குரல் மெலிந்து வருகிறது. "என் மேல் கோபமா ?” "கோடிம், மன்னிப்பு-எவ்வளவு அர்த்தமற்ற வார்த் தைகள் !" உங்கள் குரலில் அசதி தட்டுகிறது. "செலுத்த இடமில்லாமல் நான் கோபத்தை வைத்துக்கொண்டு என் செய்வது துயரமாய் மாற்றினாலாவது சுமையைத் தாங்கலாம், கோபத்தைத் தாங்க இயலாது." எனக்கு நன்றாய்ப் புரிந்துவிட்டது. அணியாயமாக நான் உங்களைக் கொன்றுவிட்டேன். என் சுமையை உங்கள்மேல் தாக்கி, அதனடியில் உங்களை நான் நசுக்கி விட்டேன். மறுபடியும் அழுகை பீறிடுகிறது. பகிதி இரவில் விழித்துக் கொள்கிறேன், இருளிலிருந்து உங்கள் குரல் மெத்தென்று வந்து என்னை அணைக்கிறது. "ஆத்மா, செளக்கியமாயிரு.” என் எலும்பு உருகுகிறது. ஆயினும் என் திடீரென இந்த ஆசி? என் கைகள் உங்களை நோக்கித் துழாவு கின்றன. "ஏன், என்னைத் தனியே விட்டு விட்டுப் போய்விடப் போகிறீர்களா ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/62&oldid=764442" இலிருந்து மீள்விக்கப்பட்டது