பக்கம்:கங்கா.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

கங்கா


உங்கள் குரல் கேட்டுக் கொண்டிருந்த வரையில் இவைகளை நான் பாராட்டவில்லை. ஆனால், ஒரு நாளிரவு திடீரென எனக்குப் பயங் கண்டது. எதனால், என்ன, எப்படி, ஏன் எதைக் கண்டு, என்று விவரமாய்த் தெரியாது. வீட்டில் பெண்டு ஒண்டி யாய் இருக்கையில், ஒரு அன்னியன் பேசாமல் உள்ளே புகுந்து, கதவைத் தாளிட்டுக் கொண்டாற் போல் பயம் என் உள் புகுந்ததை என் துக்கத்தில் உணர்ந்து, வாய் குழறியபடியே விழித்துக் கொண்டேன். உங்களைக் கூப்பிடுவதாக நினைப்பு. ஆனால் உங்கள் குரல் என்னுள் கேட்கவில்லை. அது திடீரென்று, துர, துர வெகுதூரம் சென்றுவிட்டது. அதன் தூரம் இன்னும் நீண்டு கொண்டேயிருந்தது. அதனால் என்னுள் நேர்ந்த வெறிச்சிலேயே விழித்துக் கொண்டேன். என் வீடு காலி யானதும், அதில் என்குரல் எழுப்பிய எதிரொலிகளே என்னை எழுப்பியிருக்கின்றன. என்ன வாய் குழறிக்கொண்டு எழுந்தேன் ? அந்த சமயத்தைத் திரும்பத் திரும்ப நினைவில் திருப்பினேன். திடீரென அந்த ஒலி ஞாபகத்தில் எழுந்தது. உங்களு டைய பெயர் அல்ல. நினைப்பு அப்படி. வாயிலிருந்து புறப்பட்டது : "மனோ !” இது என்ன ஜாலம் ? $ 宽 என்னவோ தெரியவில்லை, இன்று மனம் உவகை நிரம்பியிருக்கிறது. என்னுள் யாரோ கோலமிடுகிறார்கள். யாரோ பந்தாடுகிறார்கள். நெஞ்சு அப்படி துள்ளு கிறது. உடம்பெலாம் பிய்த்துப் பிடுங்குகிறது. கண் விழித்ததே முதல் ஏதோ பண்டிகை தின்ம் போல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/72&oldid=1283293" இலிருந்து மீள்விக்கப்பட்டது