இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
லா. ச. ரா
63
அப்போது, நீங்கள் உங்கள் நிலையை அடையுமுன் அருளிய உங்கள் இறுதி வார்த்தை நினைவில் எழுகிறது. மூளையில் இதுவரை ஏதோ அழுத்திப் பிடித்துக்கொண்டிருந்து இப்போது விடுபட்ட முதலெழுத் துடன், உங்கள் சொல் முழுமையின் வெற்றியுடன் எழுகிறது.
"இறவாதே."
புரிகிறது.
உங்களையலாது உங்களைக் குருவாய் வரித்த பாவனையை வணங்குகிறேன்.
உள்ளிருந்து குழந்தையின் மழலைக் குரல் அழைக் கிறது.