பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


'Poetry, working through languages, can free itself as painting and sculpture cannot, from the limitations of time and space, and can represent in words, what music cannot a series of connected actions.'

கவிதையாகிய இலக்கியம் எவ்வெவ்வகையில் மக்கட்கு உதவுகின்றதென்பதை அவ்வாசிரியரே பலவிடங்களில் விளக்கியுள்ளார். இலக்கிய மொழியை அவர் 'Language is the instrument as thought, and like the winged sandals of Mercury, it may aid the mind to mount into higher regions of thought and imagination' (P. 30) என்று விளக்குகின்றார்.

இலக்கியத்தில், தனி வாழ்வும் பரந்த அண்டகோள வாழ்வும் பொதிந்துள்ளனவென்ற உண்மையை அவர் 'In every genuinely inspired poetical conception there are two elements of life, one universal, the other individual. The universal element is the idea of the subject, whatever it may be, as it exists in an undeveloped state in the human mind, the individual element is the particular form and character which is impressed upon the subject by the creative genius of the poet.' (P. 44) என்று சுட்டிக் காட்டுகின்றார்.

இலக்கியம் மக்கள் வாழ்வோடு பிணைந்திருக்க வேண்டும் என்பதை அவர் பலப்பல வகையில் விளக்கிக் காட்டுகின்றார். ஓரிடத்தில் அவர், 'The abiding life of Poetry must be looked for far beneath the surface of society; it should be the aim of the poet first to devine the free character to his age, as distinct from this shows and illusions of things, and then