பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


நாட்டுச் சுதந்தர உணர்ச்சிக்கு அவர்தம் பாடல்களே பெரும்பாலும் தூண்டுகோல் என்னலாம். உரிமை வேட்கைப் பாடல்களைத் தவிர, கண்ணன், குயில், கடவுள், இயற்கை, காதல் ஆகியவற்றின் பாடல்களும் அவர் எழுதியவற்றுள் அடங்கும். அவையெல்லாம் இன்றும் உரிமை நாட்டில் போற்றப்படுகின்றன. தமிழ் நாட்டு இலக்கிய போக்கிலேயே பாரதியாரின் பாடல்கள் ஒரு புது திருப்பு மையம் என்னலாம்.

பாரதியாருக்குப் பின் பலவகையில் தமிழ் இலக்கியம் வளர்ச்சி அடைத்துள்ளது. பாரதியாருக்குப் பின் தமிழ் நாடும் தமிழ் இலக்கியமும் எவ்வாறு வளர்ந்துள்ளன என்பதுபற்றி இங்கேயே ஒரு தனிப்பேச்சு இருக்கின்றது. ஆகவே, இந்த அளவோடு தமிழ் இலக்கிய வளர்ச்சியைப் பற்றிய வரலாற்றை முடித்துக்கொள்ளலாம் என எண்ணுகின்றேன். எனினும் உரிமை நாட்டில் தமிழ் இலக்கியம் வளரும் வகையில் இன்று நாம் கருத்திருத்த வேண்டும். தமிழ் நாட்டில் வாழ்வோரும், பிறவிடங்களுக்குச் சென்று உங்களைப் போன்று தமிழ் வளர்ப்போரும் ஒருசேர இலக்கியப் பணிசெய்கின்றனர். என்றாலும், தமிழர் இன்னும் நன்கு இலக்கியப்பணியில் கருத்திருத்தவில்லை என்பது கண்கூடு. இன்று இந்த வங்காள நாட்டில் இலக்கியம் வளரும் அளவில் தமிழ் நாட்டில் இலக்கியம் வளரவில்லை என்று சொல்லுவேன். எங்கோ ஒருவர் இருவர் தமிழ் இலக்கியத்தை வளர்க்கும் வகையில் பாடுபடுகின்றார் என்பது உண்மையாயினும், பெரும்பாலான தமிழ்நாட்டுத் தலைவர்கள் தமிழைப் பற்றியும், தமிழ் இலக்கியத்தைப் பற்றியும் கவலையுறவில்லை என்றுதான் சொல்வேன். அதற்கு ஒரே ஒரு சான்று போதும். பிற மொழித் தொடர்பெலாம் நீங்கித் தனித் தமிழ் நாடாக இயங்கப்போகும் அப்பகுதிக்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயரிடத் தலைவர்களே மறுக்கிறார்களே! இது ஒன்று போதாதா! இன்னும் எத்தனையோ காட்டித் தமிழ் இலக்கியம் இன்று வளர வாய்ப்பிருந்தும் வாளா நாம் உறங்கிக் கழியும் நிலையை விளக்-