பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பியம் உலகம்

53


செய்த சாதனைகளையெல்லாம் கணக்கிட்டு அண்மையில் ஒரு புள்ளிவிவரம் நாள் இதழ்களில் வெளிவந்தது. இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டன மிகச்சில. காணாதனவோ, கணக்கில.

இதே நிலை இலக்கியத்திலும் உண்டு. இலக்கியம் என்பது மனிதன் திருந்திய வாழ்க்கைக்கு வந்தபின் எழுந்த ஒரு நினைவுச்சின்னம். கற்கால மனிதனோ, அதற்கு முன் வாழ்ந்த காட்டுமிராண்டி மனிதனோ, இலக்கியத்தைக் கண்டிருக்க முடியாது. அவன் வரலாற்றைப் பற்றி எழுதிய பேராசிரியர்களும் அவனுக்கு மொழியே இல்லை என்று தான் எழுதியிருக்கிறார்கள். அவன் வளர்ந்து வளம் பெற்றுப் பல்லாண்டுகள் கழிந்த பிறகேதான் மொழியும் அதன்வழி எழுந்த இலக்கியங்களும் தோன்றியிருக்க வேண்டும். தமிழும் இதற்கு விலக்கல்லவே!

தமிழ்மொழியில் மிகப்பழைய இலக்கியங்கள் உள்ளன. ஜவஹர்லால் நேரு போன்ற பெருந்தலைவர்களெல்லாம் திராவிட மொழிக்கூட்டம் மிகத் தொன்மை வாய்ந்த ஒன்று என்றும், அதன்வழி மிகப் பழங்காலந் தொட்டே நல்ல இலக்கியங்கள் தோன்றி வளர்ந்தன என்றும் எழுதி வைத்துள்ளார்கள். மொழிநூல் ஆராய்ச்சியாளர்களெல்லாம் இந்த உண்மையை வலியுறுத்தியுள்ளார்கள். மேலை நாட்டிலிருந்து வந்து தமிழ்நலம் துய்த்த கால்டுவெல் போன்ற பல முன்னாள் ஆராய்ச்சியாளர்களும், இன்றைய மொழியாராய்ச்சி செய்யும் பெரியவர்களும் இந்த உண்மையை வெளிப்படையாகவே கூறியுள்ளார்கள். திராவிட மொழிக் குடும்பத்தின் தொன்மை வாய்ந்த மொழியே தமிழ். எனவே, தமிழில் மிகப்பழங்காலந் தொட்டே இலக்கியங்கள் தோன்றின என்பதை மறுப்பார் யாரும் இருக்க முடியாதன்றோ!

முதன்முதல் தமிழில் எவ்வாறு இலக்கியங்கள் தோன்றலாயின என்பது அறிய முடியாத ஒன்றாகும். எக்காலத்தில் முதல் இலக்கியம் எழுதப்பட்டதென்பதும் வரலாற்றால்