பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பிய உலகம்

59


கொன்று அறம்பற்றி வாழ்ந்தமையே நாட்டில் கதைகளும் அதைபற்றிக் காவியங்களும் எழ இடமில்லாது செய்தது என்னலாம். பிற்காலத்தில் பல்வேறு சேர்க்கைகளினால், மக்கள் அறவாழ்வுக்கு மாசு நேர்ந்தமையினால் பெருங்காவியங்களும் நீதிக்கதைகளும் எழுந்தன என்னலாம். இன்றும் தமிழ் நாட்டில் உலவும் காப்பியங்களுள்ளே சிலம்பு, மேகலை, பெரியபுராணம் என்று எண்ணும் ஒரு சில தவிர, அனைத்தும் வடமொழியிலேயிருந்தோ பிற மொழிகளிலிருந்தோ பெயர்த்து எழுதப்பட்ட காவியங்கள் தாமே?

காவியங்களைப் பற்றி ஆராய்வதன்முன், அக்காவியம் பற்றித் தண்டி அலங்கார இலக்கண நூலார் கூறும் காவிய இலட்சணத்தையும் அறிதல் வேண்டும். காப்பியத்தை இரண்டாகப் பிரித்ததை மேலே கண்டோம். பெருங்காப்பியம் எப்படி அமைய வேண்டும் என்பதைத் தண்டி ஆசிரியர்,

”பெருங்காப் பியநிலை பேசுங் காலை
வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றின்ஒன்று
ஏற்புடைத் தாகி முன்வர இயன்று
நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித்
தன்நிகர் இல்லாத் தலைவனை உடைத்தாய்
மலைகடல் நாடு வளநகர் பருவம்
இருசுடர்த் தோற்றம்என்று இனையன புனைந்து
நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல்
பூம்பொழில் நுகர்தல் புனல்விளை யாடல்
தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல்
புலவியிற் புலத்தல் கலவியிற் கலத்தல்என்று
இன்னன புனைந்த நன்னடைத் தாகி,
மந்திரம் தூது செலவுஇகல் வென்றி