பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மணமகளின் மிடுக்கு 19

பட்ட காலம் இது. அவன் பெண்விட்டாருக்குக் 'குலாம் ஆகிவிடுகிருன்.

உண்ண வா மருமகனே ? பண்ணினது போதும் அத்தே ! - மருமகன் சாப்பிடுகிருன். சாப்பிடும்போது மெல்லத் - தன் விருப்பத்தை வெளிப்படுத்துகிருன்.

பெண்ணே அனுப்பாயோ

பெற்ருேரே சொல்லுங்கள் ! - மாமியாருக்கு இப்போது கோபம் வருகிறது. தன் பெண்ணுக்கேற்ற செல்வமும் செளகரியங்களும் அவன் வீட்டில் இல்லை என்பதை எடுத்துச் சொல்லத் தொடங்கு கிருள். 'உங்கள்விட்டில் தலைக்கு எண்ணெய் இல்லையாம்! சிவிச் சிக்கறுக்கச் சிப்பில்லேயாம்! பூசிக்கொள்ள மஞ் சள் இல்லையாம்! இப்படித் தரித்திரம் பிடுங்கித் தின்னும் வீட்டில் எங்கள் செல்வப் பெண் எப்படி வந்து இருப் பாள் அவள் இங்கே எப்படி இருந்தாள் தெரியுமா? ஆஹா வாரி முடித்துக் கொண்டை போட்டுக்கொண்டு வாசலிலேவந்து நின்ருளானல் விதிமுழுவதும் அவள் அழகு சுடர்வீசும். இந்த சக்திலுள்ளார் எல்லோரும் அவள் அழகிலே மயங்கி அடிமையாகி விடுவார்கள். அவள் மேனி சந்தனத்தை வென்றுவிடுமே ! பூஞ்சரத்தைத் தோற்கடிக் குமே!-இந்தக் கருத்தையே பாட்டாகச் சொல்கிருள்.

எண்ணெய் இல்லே சிப்பும் இல்லை

இளந்தேங்காய் மஞ்சள் இல்லை. வாசி முடித்துக் கொண்டு.

வத்திருப்பாள் சந்தினிலே. சந்தை விகிலமதிப்பாள்

சந்தனத்தைத் தோற்கடிப்பாள். பூவை விலைமதிப்பாள்.

பூஞ்சரத்தைத் தோற்கடிப்பாள்!