பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

கஞ்சியிலும் இன்பம்

போல இருக்கும்" என்று சொல்லி மனைவிமார் சமைத்து உண்ணச் செய்கிறார்களே, அதுதான் செல்வ வாழ்க்கையாம். " ஐய, மருந்து இவை, உண் என்று மாதர் அட்டு ஊட்டும் செல்வம்' என்று ஒரு புலவர் அதை வருணிக்கிறார் "அறுசுவை உண்டி அமர்ந்து இல்லாள் ஊட்ட, மறு சிகை நீக்கி உண்டோர்" என்று ஐசுவரியத்தால் வரும் போகத்துக்கு அளவு கட்டுகிறார் ஒரு புலவர்.

செல்வர்களுடைய வாழ்க்கையிலேயே மாதர் சமையல் செய்யவேண்டும், புருஷனுக்குச் சாப்பாடு போட வேண்டும் என்று இருந்தால் ஏழைக்குச் சொல்ல வேண்டுமா? செல்வத்தால் வரும் பாத்திரங்களும் உணவுப் பண்டங்களும் ஏழைக்கு இல்லை. ஆனாலும் அவை இல்லாத குறையைப் போக்க அந்த ஏழைக்குக் கற்பகம்போல அருமைக் காதலி இருக்கிறாள். பல செல்வர்களுடைய வாழ்க்கை. ஒன்றாலும் குறைவில்லாமல் இருந்தாலும், அட்டு ஊட்டும் மாதர் அடைவாக இருப்பதில்லே. ஏழைத் தொழிலாளிக்கோ சோறு சமைக்க அரிசி இல்லாவிட்டா லும் கூழ் காய்ச்சக் குறுநொய் இருப்பதால் அதை அவன் மனைவி காய்ச்சி அன்போடு அவனுக்கு ஊற்றுகிறாள். அவன் அவளது முகமலர்ச்சியையும் இன்மொழியையும் துணையாகக் கொண்டு அந்தக் கூழையே இனிய அமுதமாக 'உட்கொள்கிறான். அவள் குறுநொய்யைக் கொண்டு கூழ் காய்ச்சினாலும் தன் அன்பையல்லவா அதில் சேர்த்து மணம் ஊட்டியிருக்கிறாள்? .

வயல் வெளிகளில் காயும் வெயிலில் உழைக்கின்ற உழைப்பாளிகள் நடுப்பகலில் வரும் கஞ்சிக் கலயத்தைக் கண்டு எத்தனை உற்சாகம் அடைகிறார்கள் ! கஞ்சி வருகிற தென்பது ஒன்றுதானா அவர்கள் இன்பத்துக்குக் காரணம்? அல்ல, அல்ல. கஞ்சி கொண்டு வரும் காதலியின் காட்சிதான் அந்த இன்பக் கொந்தளிப்புக்கு மூலகாரணம்.