பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முன்னுரை

பல ஆண்டுகளாக நாடோடிப் பாடல்களேத் தொகுத்து வரும் முயற்சியில் நான் ஈடுபட்டிருப்பதை அன்பர்கள் அறிவார்கள். இதற்குமுன் 'நாடோடி இலக்கியம்' என்ற பெயரோடு ஒரு புத்தகம் வெளியாகி யிருக்கிறது. அது வெளியானபின் காடோடிப் பாடல் களப்பற்றிய கவனம் தமிழ் காட்டினருக்கு அதிகமாகி யிருப்பது தெரிந்து மகிழ்ச்சி அடைகிறேன். ரேடியோவில் மாதங்தோறும் நாடோடிப் பாடல்களைப் பாடுகிரு.ர்கள். நாடோடிப் பாடல்களின் போலி பலவும் இப்போது நாட்டில் உலவுகின்றன. பலர் அவற்றையே நாடோடிப் பாடல்கள் என்று எண்ணிவிடுகின்றனர். .

கிராமத்திலே உள்ள மக்கள் வேலை செய்யும்பொழு தும் பொழுது போக்கும்பொழுதும் விளயாடும்பொழுதும் பாடும் காடோடிப் பாடல்கள் இன்னரால் இயற்றப் பட்டவை என்ற நியதிக்கு உட்படாதவை. காலந்தோறும் இடங்தோறும் பரவி, மாறியும் விரிந்தும் சுருங்கியும் வழங்குபவை. இய்ற்கையோடு ஒட்டி வாழும் உள்ளமும் வாழ்க்கையும் உடையவர்களுடைய உணர்ச்சியையும் செயல்களேயும் வெளியிடும் அப் பாடல்கள் புலவர் உலகத் துக்குப் புறம்பே நிற்பவை. கிற்கிறது என்பதை நிக்குது. என்றும், ஆயிற்றென்பதை ஆச்சு என்றும் மாற்றிக் கொச்சைமொழிகளை நிரப்பிப் பாடினுல் நாடோடிப்பாட்டு ஆகிவிடுமென்று சிலர் நினைக்கிருர்கள். காட்டிலே மலரும் மலரைப்போலச் செயற்கையின் வேலேப்பாடுகளின்றி மலரும் பாடல்களாகிய அவற்றைப்போல நாகரிக வாழ்க் கையில் ஈடுபட்ட மக்கள் பாட முடியாது அநுபவிக்கவே முடியாதே குழந்தை பேசும் மமுலேச் சொல்லப்போல் ஒருவர் பேச முடியுமானல் காடோடிப் பாடல்களைப் போலப் புலவன் பாடலாம். இரண்டும் இயலாத காரியம்