பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

கஞ்சியிலும் இன்பம்

சோறு ஆக்குவதும் தனியாகத் தின்பதுமாக இருக்கிறோமே நம்மோடு ஒருவர் இருந்து கொஞ்சிக் குலாவி உண்டால் எவ்வளவு சுகமாக இருக்கும்.! ஆண்பிள்ளை இல்லாத வாழ்வு ஒரு வாழ்வா? எவ்வளவு சம்பாதித்தாலும் கணக்குப் பார்த்து வைத்துக்கொள்ளவும் இன்பம் தந்து துணையாக நிற்கவும் ஒருவன் வேண்டும்" என்ற கனவிலே அவள் உள்ளம் படர்ந்தது. முயற்சியாலும் நாணயத்தாலும் அவள் மேலும் மேலும் உயர்ந்து வந்தாள். கூலி வேலையை விட்டுவிட்டு வியாபாரம் செய்யத் தொடங்கினாள். கையில் காசு சேர்ந்தது. கண்ணுக்கு அழகான புருஷனைக் கட்டிக் கொண்டாள்.

அவள் வாழ்க்கைக்கு இனி வேண்டியது இன்றும் இல்லை என்ற திருப்தி ஒரு கணம் உண்டாயிற்று. ஆனல் அது நிலைக்கவில்லை. இன்ப சுகந்தனில் ஒன்றியிருந்த அவள் காதில் யாரோ கூறிய வார்த்தை விழுந்தது. "அவள், கடைக்காரி அவன் கணக்குப்பிள்ளை. பணம் வேகமாகச் சேர்கிறது. நல்ல வீடும் கட்டிவிட்டாள். எல்லாம் இருந்து என்ன பிரயோசனம்? செத்துப்போனால் கொள்ளி போடப் பிள்ளை இல்லையே!" என்று அவர்கள் குறைகூறியது அவள் உள்ளத்தே தைத்தது. வாழ்க்கையில் அடுத்த தேவை குழந்தை என்ற கவலை அவளைப் பிடித்தது.

தானம் செய்தாள். தலயாத்திரை போனாள்; விரதம் இருந்தாள். எல்லாவற்றிற்கும் போதிய செல்வம் இப்போது அவளிடம் இருந்தது. கடைசியில் குழந்தை பிறந்தது. குழந்தைக்காக மாடு வாங்காள். குழந்தை, வளர்ந்த பிறகு தயிருக்கும் நெய்க்குமாக இரண்டு எருமை வாங்கிக் கட்டினாள். அவற்றை மேய்க்க ஒரு வேலைக்காரப் பையனை அமர்த்தினாள். தன் எருமைகளை உத் தேசித்து அவனை அன்புடன் பாதுகாத்தாள். அவனுக்குச்