பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


66 கஞ்சியிலும் இன்பம்

சம்பாஷணையாக கடக்க வேண்டும். அவன் ஏதோ ஒரு பாட்டைப் பாடுகிறவனைப் போல ஆரம்பித்தான்.

ஒரு மரம் ஏறி, ஒரு மரம் பூசி

ஒரு மரம் பிடித்து, ஒரு மரம் வீசிப்

போகிறவன் பெண்ணே உன்

வீடு எங்கே?

தெளிவாக அர்த்தம் புரியாமல் உள்ள இந்த வார்த்தைகளைக் கூட்டத்தில் உள்ளவர்கள் யாரேனும் கவனித்தால், 'ஏதோ பைத்தியக்காரப் பாட்டைப் பாடுகிருன்” என்று நினைத்துப் போய் விடுவார்கள். ஆனல் அந்தப் பெண் அறிவுடையவளாக இருந்தால் அதன் பொருளே உணர்ந்து கொள்வாள். அவன் மேல் காதல் உடையவளாக இருந்தால் பதிலும் சொல்வாள். இரண்டும் இல்லாதவளானலோ அவனுக்கு ஒன்றும் கஷ்டம் இல்லை. கேட்ட கேள்வி காற்ருேடு போய் விடுகிறது-இந்தத் துணிவுடன்தான் அவன் அந்தக் கேள்வியைக் கேட்டான். அவள் அறிவுடையவள்: காதலும் உடையவள். ஒரு நாளைப்போலத் தன்னேயே உற்றுக் கவனிக்கும் ஒரு கட்டிளங்காளேக்கு முன்னல் தினமும் போய்க் கொண்டிருக்கும் அவள் ஒரு நாளாவது அவனேக் கவனிக்காமலா இருப்பாள்? அப்படிக் கவனிக்கும்போது அவனுடைய உள்ளக் குறிப்பு அவளுக் குப் புலனுகாமற் போகாதே. அவன் செயலே அவள் விரும்பாவிட்டால் வேறு வழியாகவோ, வேறு வேளையிலோ அவள் போகக் கூடுமே ஒரே வழியில் ஒரே சமயத்தில் அவன் கண்களுக்கு விருந்தளிக்க வருபவளேப் போலவே அல்லவா அவள் காட்சி அளிக்கிருள்? அவளுடைய உள்ளத்திலும் காதல் புகுந்து விட்டதுதான் காரணம். அவனுடைய கேள்வியை அவள் தெரிந்து கொண்டாள். o ஒரு மரமாகிய பாதக் குறட்டுக்கட்டையின் மேலே ஏறி,