இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இளங்கோவடிகள்
11
"நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
தமிழ்வரம் பறுத்த தண்புனல் நாடு"
என்று குறுகிய தமிழ் நாட்டைப் பாடிய பொழுது என் மனம் என்ன பாடுபட்டது என்பதை நீ அறிவாயோ?
"நெடுங்கடலே ! செந்தமிழ் நாட்டைக் கொள்ளை கொண்டமையால் நீ கொடுங்கடல் ஆயினாய் ! உன் கொடுமையால் நாடிழந்த பாண்டியன் வடதிசையிலுள்ள கங்கையும் இமயமும் கொண்டு வசையொழிய வாழ்ந்தான். உன்னைத் துாற்றுவேன்; அம்மன்னனைப் போற்றுவேன்.
" வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி"
என்று வாழ்த்திக்கொண்டு கடற்கரையைவிட்டு அகன்றார் அம்முனிவர்.
1. நெடியோன் குன்றம் = திருவேங்கடமலை,
- தொடியோள் பெளவம் = குமரிக்கடல்
- சிவப்பதிகாரம்: வேனிற் காதை
- தொடியோள் பெளவம் = குமரிக்கடல்
2. சிலப்பதிகாரம் : காடுகாண் காதை.