பக்கம்:கடற்கரையினிலே.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. திருமங்கை மன்னன்


மிழ் நாட்டிலே, கலைமணம் கமழும் துறைமுக நகரங்கள் சில உண்டு. அவற்றுள்ளே தலைசிறந்தது மகாபலிபுரம். அங்குள்ள பாறைகளெல்லாம் பழங்கதை சொல்லும்; கல்லெல்லாம் கலைவண்ணம் காட்டும். அந்நகரின் கடற்கரையிலே அனந்த சயனத்தில் ஆனந்தமாய்ப் பள்ளி கொண்டுள்ளார் திருமால். தலசயனம் என்பது அக்கோயிலின் பெயர். அங்குள்ள பெருமானை வணங்கித் தமிழ்ப் பாமாலை அணிந்து போற்றும் ஆசையால் வந்தடைந்தார் திருமங்கையாழ்வார்; பள்ளிகொண்ட பரந்தாமனது கோயிலருகே நின்று நெடுங்கடலை நோக்கிப் பேசலுற்றார் :

"தொண்டை நாட்டுப் பண்டைத் துறைமுகமே! நீ, மல்லை என்னும் பெயருடையாய்; எல்லையற்ற புகழுடையாய். உன் கடற்கரையிலே குன்றும் மணலும் கொஞ்சி விளையாடும். உன் அளப்பரும் பெருமையை அறிந்தன்றோ மாமல்லை என்று உன்னைப் போற்றினார் எங்கள் * மாதவச் செல்வர்?


  • பூதத்தாழ்வார் மகாபலிபுரம் மல்லையிலே பிறந்த மாதவர்

"மாமல்லை கோவில் மதிட்குடந்தை என்பரே

ஏவல்ல எந்தைக்கு இடம்" - என்பது அவர் திருவாக்கு.


3