பக்கம்:கடற்கரையினிலே.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பட்டினத்தார்

39


"அலைகடலே ! உன் அலையை ஒத்ததே என் நிலையும் ! அடுத்தடுத்து வருகின்ற உன் அலைகளை எண்ணமுடியுமோ? அப்படியே என் பிறப்பும் எண்ணத் தொலையாது. இம்மண்ணுலகிற் பிறந்து, நான் மனம் சலித்தேன்; என்னைச் சுமந்து சுமந்து அன்னையர் மெய் சலித்தார். என்னைப் படைத்துப் படைத்து அயனும் கை சலித்தான்; இதுவரையில் பிறந்தது போதும். இனிப் பிறவாதிருக்க வேண்டும். அந்நிலையை நாடியே உன்னைத் தஞ்சம் அடைந்தேன். -

"பழங்கடலே ! அப்பர் என்ற அருமைப் பெயர் பெற்ற அண்ணல் - செஞ்சொற் பாமாலை தொடுத்துச் சிவனார் திருவடியில் அணிந்த செம்மல் - முன்னொருகால் உன் கரையை வந்தடைந்தார்; உருகிப் பாடினார். ஒப்பற்ற அன்பு வாய்ந்த அப்பெருமானை 'அப்பர்' என்று அழைப்பது எத்துணை அழகு ! என் அப்பன் காட்டிய நெறியைக் கடைப்பிடித்தல் என் பிறப்புரிமையன்றோ? * 'மனம் என்னும் தோணியில் சினம் என்னும் சரக்கை ஏற்றி, மதி என்னும் கோலை ஊன்றி, மாக்கடலிற் செல்லுங்கால், மதன் என்னும் பாறை தாக்குமே ! ஒற்றியூர் உடைய கோவே ! அப்போது உன்னை நினைக்கும்


  • " மனம்எனும் தோணி பற்றி

மதிஎனும் கோலை ஊன்றிச்
சினம்எனும் சரக்கை ஏற்றிச்
செறிகடல் ஒடும் போது
மதன்எனும் பாறை தாக்கி
மறியும்போது அறிய வொண்ணா
உனைஎணும் உணர்வை நல்காய்
ஒற்றியூர் உடைய கோவே"

- திருநாவுக்கரசர் தேவாரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/41&oldid=1248487" இலிருந்து மீள்விக்கப்பட்டது