பக்கம்:கடற்கரையினிலே.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12. கம்பர்.


பாண்டி நாட்டுக் கடற்கரையிலுள்ள பழம்பதிகளில் ஒன்று தருப்பசயனம் என்னும் திருப்புல்லணை. திருப்புல்லாகிய தருப்பையைத் தலையணையாக வைத்து, கருங்கடலை நோக்கி, கருணைக் கடலாகிய இராமன் வரங்கிடந்தமையால் திருப்புல்லணை என்னும் பெயர் அப்பதிக்கு அமைந்ததென்பர். வானர சேனையுடன் நாடும் மலையும் கடந்து வந்த இராமன், இலங்கைக்கு எதிரேயுள்ள அக்கடற்கரையை அடைந்தான் குறுக்கே நின்ற கடலைக் கடந்து எவ்வாறு அரக்கர் நாட்டுக்குச் செல்வது என்றெண்ணிக் கவலையுற்றான். அந்த மனப்பான்மையோடு அவ்வீரன் நின்ற நிலையையும் நெடுங்கடல் அவனை வரவேற்ற நீர்மையையும் கவிக் கண்ணாற் கண்ட கம்பர் பேசுகின்றார் :

"கருங்கடலே ! அரக்கர் வாழும் இலங்கையின் நாற்புறமும் அரணாக நின்று அருங்காவல் புரிகின்றாயே! அவ்வரக்கர் அறநெறி துறந்தவர் என்பதை நீ அறியாயோ? 'இரக்கமற்றவர் அரக்கர்' என்ற வாய்மொழியும் கேட்டிலையோ? உன் காவலால் அன்றோ அன்னார். நிறுவிய வல்லரசு பின்னமின்றி வாழ்கின்றது? 'மா நீர் சூழ்ந்த இலங்கைக்கு மாற்றார் எவரேனும் வரமுடியுமா?' என்று அரக்கர் மார்தட்டிப் பேசுகின்றார்களே ! 'அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும்